மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணம்: சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதி

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடைபெறும் திருக்கல்யாண  உற்சவத்துக்கு சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

மதுரையில் பிரசித்தி பெற்ற மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் என மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கொடியேற்ற நிகழ்வை காண பக்தர்கள் காலை 6 முதல் 9 மணி வரையும், 11.30 மணி முதல் 12.30 வரையும் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

மேலும், கொடியேற்ற நிகழ்வின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் வரும் 24-ம் தேதி நடைபெறுகிறது. இந்த கல்யாண உற்சவத்தைப் பக்தர்கள் காலை 9.30 முதல் 2.30 வரை திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி தரிசனம் செய்யலாம். 

மேலும், திருக்கல்யாண உற்சவத்தை பக்தர்கள் ஆன்லைன் வழியாக காணக் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com