அரக்கோணத்தில் கரோனா சிகிச்சை மையம் மீண்டும் திறப்பு

அரக்கோணத்தில் கரோனா சிகிச்சை மையம் மீண்டும் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. முதல் நாளில் ஆறு நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 
அரக்கோணத்தில் கரோனா சிகிச்சை மையம் மீண்டும் திறப்பு
அரக்கோணத்தில் கரோனா சிகிச்சை மையம் மீண்டும் திறப்பு

அரக்கோணத்தில் கரோனா சிகிச்சை மையம் மீண்டும் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. முதல் நாளில் ஆறு நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

கரோனா முதற்கட்டம் கடந்த 2020 மார்ச் மாதம் துவங்கிய போது அரக்கோணத்தில் சகாய தோட்டத்தில் உள்ள டான் பாஸ்கோ வேளாண் கல்லூரி வளாகத்தில் கரோனா சிகிச்சை மையம் துவக்கப்பட்டது. 

தொடர்ந்து கரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைந்த நிலையில் அந்த மையம் மூடப்பட்டது. தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் கரோனா சிகிச்சை மையத்தை அரக்கோணத்தில் திறக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை மீண்டும் கரோனா சிகிச்சை மையம் 80 படுக்கை வசதிகளுடன் திறக்கப்பட்டது. அரக்கோணம் வட்டாட்சியர் பழனி ராஜன் அங்கு நேரில் சென்று அங்கு இருக்கும் வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், அரக்கோணத்தில் தொடர்ந்து கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் திறப்பதற்காக அரக்கோணம் அடுத்த ஆட்டுப்பாக்கத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் 120 படுக்கைகள் வசதியுடன் தயாராக உள்ளது என்றார் வட்டாட்சியர் பழனி ராஜன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com