தமிழகத்தில் +2 செய்முறைத் தேர்வு தொடங்கியது

தமிழக பள்ளிக்கல்வியில் பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வு வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது.
சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்முறை தேர்வுக்காக வந்த மாணவிகளிடம் உடல் வெப்பநிலை மற்றும் கிருமிநாசினி வழங்கும் ஆசிரியர்கள்.
சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்முறை தேர்வுக்காக வந்த மாணவிகளிடம் உடல் வெப்பநிலை மற்றும் கிருமிநாசினி வழங்கும் ஆசிரியர்கள்.

சென்னை: தமிழக பள்ளிக்கல்வியில் பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வு வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது.
 
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, செய்முறைத் தேர்வு நடைபெற்று வருகிறது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், பாதுகாப்பான மற்றும் எளிமையான முறையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்தப்படுகிறது. கரோனா பரவ வாய்ப்பில்லாத செய்முறைப் பாடங்களில் மட்டுமே தேர்வு நடத்தப்படுகிறது என்று விளக்கம் அளித்துள்ளார்.

சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தாவரவியல் தேர்வு எழுதும் +2 வகுப்பு மாணவிகள்
சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தாவரவியல் தேர்வு எழுதும் +2 வகுப்பு மாணவிகள்

பிளஸ் 2 பொதுத்தோ்வு மே 5 முதல் 31-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. அதற்கு முன்னதாக மாணவா்களுக்கு செய்முறைத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கி ஏப். 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.

இந்நிலையில், கரோனா தொற்று பரவலைத் தவிா்க்கும் விதமாக தோ்வுத்துறை வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செய்முறைத் தோ்வை நடத்த வேண்டும். தனிநபா் இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட அம்சங்களை அவசியம் பின்பற்ற வேண்டும் என்று அரசு தேர்வுத் துறை இயக்குநர் உஷாராணி, அனைத்துமுதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

மேலும், செய்முறைத் தோ்வில் ஏதேனும் புகாா்கள் கிடைக்கப் பெற்றால் சம்மந்தபட்ட பள்ளித் தலைமையாசிரியா்கள் பொறுப்பேற்க நேரிடும். எனவே, கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com