முகக்கவசம் அணிந்தால் மட்டுமே நகருக்குள் அனுமதி: காங்கயம் நகராட்சி எச்சரிக்கை

முகக்கவசம் அணிந்தால் மட்டுமே நகருக்குள் அனுமதிக்கப்படும் என, காங்கயம் நகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
முகக்கவசம் அணிந்தால் மட்டுமே நகருக்குள் அனுமதி
முகக்கவசம் அணிந்தால் மட்டுமே நகருக்குள் அனுமதி

முகக்கவசம் அணிந்தால் மட்டுமே நகருக்குள் அனுமதிக்கப்படும் என, காங்கயம் நகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

கரோனா பரவல் தற்போது அதிகரித்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் கரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில், காங்கயம் நகருக்குள் நுழையும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். இல்லையெனில், அபராதம் விதிக்கப்படுவதோடு, சம்மந்தப்பட்ட நபர்கள் மருத்துவ பரிசோதனைக்கும் உள்ளாக்கப்படுவர் என காங்கயம் நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையர் மூர்த்தி கூறியபோது, 

கரோனா தடுப்பு நடவடிக்கையாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். தனியார் வணிக நிறுவனங்களுக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவதோடு, தனி நபர் இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தி வருகிறோம். இதனை மீறும் வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.

மேலும், காங்கயம் நகருக்குள் நுழையும் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். இல்லையெனில் அபராதம் விதிக்கப்படுவதோடு, மேற்கண்ட நபர்கள் மருத்துவ பரிசோதனைக்கும் உட்படுத்தப்படுவர். காங்கயம் பேருந்து நிலையத்துக்குள் முகக்கவசம் அணியாமல் வரும் பயணிகள், பேருந்து நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். கரோனா தொற்றைத் தடுக்கும் நடவடிக்கைக்கு, பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com