எட்டுக்குடி முருகன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

எட்டுக்குடி அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. 
எட்டுக்குடி அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி
எட்டுக்குடி அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி


எட்டுக்குடி அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. 

முருகனின் ஆதி படை வீடு என அழைக்கப்படும் எட்டுக்குடி அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டு பக்தர்கள் அனுமதியின்றி உள்பிரகாரத்தில் நித்ய கால பூஜைகள் நடைபெற்றன.

இந்நிலையில், நிகழாண்டும் சித்திரைத் திருவிழாவானது கரோனா பரவல் இரண்டாம் கட்ட அலை வேகமாக பரவி வருவதால் உள் திருவிழாவாகவே சனிக்கிழமை காலை  ரிஷப லக்கனத்தில் துவஜாரோகணம் (கொடியேற்றத்துடன்) தொடங்கியது.

இதையொட்டி பஞ்சவாத்தியங்கள் முழங்க, வேதபாராயணங்கள் பாட, விநாயகர், சண்டிகேஸ்வரர், சுப்ரமணியர், அஸ்திர தேவர் ஆகியோருடன் எழுந்தருளி கோவில் பிரகாரத்திலுள்ள செப்புக்கொடிமரத்தில்  திருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது.

பக்தர்கள் அனுமதியின்றி நடைபெற்ற சித்திரை திருவிழா கொடியேற்றம்

எட்டுக்குடி அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. 

தொடர்ந்து கொடிமரத்திற்கு மஞ்சள், பால், பஞ்சாமிர்தம், வாசனைத்திரவியங்கள் உள்ளிட்ட 16 வகை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்விக்கப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

வேதவிற்பன்னர்கள் வேதபாராயணமும், திருக்கோயில் ஓதுவார்கள் திருமுறை பாராயணமும் பாடினார்கள்.

தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறை மற்றும் இந்து சமய அறநிலை சார்பில் குறிப்பிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் படி கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு பக்தர்கள் அனுமதியின்றி கோவில் பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் மட்டுமே கொடியேற்றத்தின் பொழுது அனுமதிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com