சிதம்பரத்தில் தமாகா சார்பில் முகக்கவசம், கபசுர குடிநீர் வழங்கல்

கடலூர் மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி சார்பாக சிதம்பரத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு
சிதம்பரத்தில் தமாகா சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு முகக்கவசம் வழங்கிய தமாகா மாவட்ட இளைஞரணி தலைவர் கே.ரஜினிகாந்த். உடன் நகரத் தலைவர் தில்லை ஆர்.மக்கீன்
சிதம்பரத்தில் தமாகா சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு முகக்கவசம் வழங்கிய தமாகா மாவட்ட இளைஞரணி தலைவர் கே.ரஜினிகாந்த். உடன் நகரத் தலைவர் தில்லை ஆர்.மக்கீன்


சிதம்பரம்: கடலூர் மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி சார்பாக சிதம்பரத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு இலவச முகக் கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

சிதம்பரம் தெற்கு சன்னதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் ரஜினிகாந்த் தலைமை வகித்தார். மாநில கொள்கை பரப்பு செயாலாளர் எம்.என்ராதா, மாவட்ட பொதுச் செயலாளர் கே.நாகராஜன்,  மாவட்ட துணைத்தலைவர் ராஜா சம்பத்குமார், பாண்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிங்காரவேலு வரவேற்றார்.  நிகழ்ச்சியில் நகர தமாகா தலைவர் தில்லை ஆர்.மக்கீன், நகர துணைத் தலைவர் இளங்கோவன் நகர பொருளாளர் நடராஜ் பட்டாபிராமன் நகர செயலாளர் சம்பந்தமூர்த்தி, வட்டார இளைஞர் அணி தலைவர் ராஜ்குமார், நகர தமாகா இளைஞர் அணி செயலாளர் கே.மணிகண்டன் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர் சாய் முரளிகிருஷ்ணா நன்றி தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து  நகர தமிழ் மாநில  காங்கிரஸ் சார்பில் வாழைத்தோப்பு பகுதியில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், கிருமிநாசினி வழங்கப்பட்டது. நகர தலைவர் தில்லை ஆர்.மக்கீன் தலைமை வகித்து வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட மகளிரணி தலைவி ராஜலட்சுமி, முன்னாள் நகரமன்ற உறுப்பினர் மீனா செல்வம், ஜனகம், ருக்குமணி, மாவட்ட இளைஞரணி செயலாளர் ராதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமாகா மாவட்ட தொண்டரணி தலைவர் குமார் தலைமையில் 5 வது வார்டில் தில்லையம்மன் கோவில் அருகில் பொதுமக்களுக்கு இலவசமாக கபசுரக்குடிநீர், கிருமிநாசினி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட மகளிரணி செயலாளர் செல்வி மற்றும் அனைத்து தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com