உர விலை உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மணப்பாறையில் உர விலை உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தியும், தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உர விலை உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
உர விலை உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில், உர விலை உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தியும், தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கக் கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மணப்பாறையில், உர விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பயணியர் மாளிகை முன்பு சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  சங்கத்தின் வட்டச்செயலாளர் என்.கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கடுமையான உயர்ந்துள்ள உர விலை உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தியும், தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க கோரியும், விவசாய சட்டத்திருத்தங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் மத்திய அரசிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

சங்கத்தின் புறநகர் மாவட்டச் செயலாளர் வி.சிதம்பரம், வையம்பட்டி ஒன்றிய செயலாளர் என்.வெள்ளைச்சாமி, மருங்காபுரி ஒன்றியச் செயலாளர் ஏ.முருகேசன் ஆகியோர் விளக்கவுரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில், மணப்பாறை – வையம்பட்டி - மருங்காபுரி ஒன்றிய பகுதிகளைச் சேர்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பலர் முககவசம் அணிந்து சமூக இடைவெளியில் கலந்துகொண்டனர்.

படவிளக்கம்: உர விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com