திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம் 

திருவாடானை அருகே உள்ள திருவெற்றியூர் பாகம்பிரியாள் சமேத வல்மீகநாதர் சுவாமி திருக்கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் சமூக இடைவெளி கடைப்பிடித்து முக கவசம் அணிந்தும் பக்தர்கள் அனுமதியின்றி கொடியேற்றம்
திருவெற்றியூர் பாகம்பிரியாள் சமேத வல்மீகநாதர் சுவாமி
திருவெற்றியூர் பாகம்பிரியாள் சமேத வல்மீகநாதர் சுவாமி

திருவாடானை: திருவாடானை அருகே உள்ள திருவெற்றியூர் பாகம்பிரியாள் சமேத வல்மீகநாதர் சுவாமி திருக்கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் சமூக இடைவெளி கடைப்பிடித்து முக கவசம் அணிந்தும் பக்தர்கள் அனுமதியின்றி கொடியேற்றம் நடைபெற்றது.

திருவாடானை தாலுகா திருவொற்றியூரில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பாகம்பிரியாள் சமேத வல்மீக நாதர் சுவாமி திருக்கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடுவது வழக்கம்.

கடந்தாண்டு கரோனா பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதி இன்றி திருவிழா நடைபெற்றது. அதேபோல் இந்த ஆண்டும் கரோணா இரண்டாவது அலைவரிசை தீவிரமடைந்துள்ளதால் தமிழக அரசின் கட்டுப்பாடுகளுடன் திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டு கட்டுப்பாடுடன் திருவிழா அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சித்திரை திருவிழாவில் கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் பக்தர்கள் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் சிவாச்சாரியர்கள் கோயில் நிர்வாகிகள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைப்பிடித்து கொடியேற்றம் நடைபெற்றது.

திருவெற்றியூர் பாகம்பிரியாள் சமேத வல்மீகநாதர் சுவாமி திருக்கோயில் பக்தர்களின்றி சிவாச்சாரியர்கள், கோயில் நிர்வாகிகள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைப்பிடித்து கொடியேற்றம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாள் இரவும் சுவாமி புறப்பாடு கோவில் உள் பிரகாரத்தில் மட்டுமே நடைபெறும். தேரோட்டம் மற்றும் கலை நிகழ்ச்சி அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கரோனா பரவல் காரணமாக இரவு நேரங்களில் திருக்கோவிலில் மண்டபங்களில் மற்றும் வாகனங்களில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை. சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் வெப்பமானி மூலம் பரிசோதனை செய்வதுடன் கிருமிநாசினி தெளித்தும், கைகளை சுத்தம் செய்தல் சமூக இடைவெளி கடைப்பிடித்தும் முககவசம் அணிந்து சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கபடும்.

திருவிழா பத்து நாட்கள் நடைபெறும் இம்மாதம் 26-ஆம் தேதி நிறைவடைகிறது. ஆலயம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

கோவில் திருவிழாவிற்கு தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் தவிர்க்குமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளன என்று தேவஸ்தான சரக கண்காணிப்பாளர் செந்தில்குமார் கெளரவ கண்கானிப்பாளர் சுந்தர்ராஜ் ஆலய குருக்கள் மணிகண்டன் ஆகியோர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com