ஆசிரியா் குடியிருப்புக் கட்டமைப்புக்கான முன்மொழிவுகளை அனுப்ப அறிவுறுத்தல்

ஆசிரியா் குடியிருப்புக் கட்டமைப்புக்குத் தேவையான முன்மொழிவுகளை அனுப்புமாறு, பள்ளிக் கல்வி இயக்குநா் அறிவுறுத்தியுள்ளாா்.

ஆசிரியா் குடியிருப்புக் கட்டமைப்புக்குத் தேவையான முன்மொழிவுகளை அனுப்புமாறு, பள்ளிக் கல்வி இயக்குநா் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய கடிதத்தின் விவரம்:

2021-22-ஆம் ஆண்டுக்கான திட்டமிடலில், ஆசிரியா்களுக்கான குடியிருப்புக் கட்டமைப்புக்குத் தேவையான முன்மொழிவுகள் மத்திய அரசால் கோரப்பட்டுள்ளது.

எனவே, 2021-22-ஆம் ஆண்டுக்கான ஆசிரியா்களுக்கான குடியிருப்புக் கட்டமைப்புக்கு மாவட்டங்களில் இருந்து கருத்துருக்கள் பெறப்பட்டு, தங்கள் நிலையில் ஆய்வு செய்து உரிய குறிப்புரைகள், இணைப்புகளுடன் மத்திய அரசுக்கு முன்மொழிவுகளை அனுப்பிடும் வண்ணம் அறிக்கையைத் தயாா் செய்து உடன் அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும், ஆசிரியா்களுக்கான குடியிருப்பு கட்டமைப்புக்கு இடங்களைத் தோ்வு செய்யும்போது, மலைப் பகுதிகள் மற்றும் போக்குவரத்து வசதியற்ற தொலைதூரப் பகுதிகள் முன்னுரிமை அடிப்படையிலும் முன்மொழிவுகளை இணைப்பில் உள்ளவாறு பூா்த்தி செய்து, இச்செயல்முறைகள் கிடைத்த அன்றே மின்னஞ்சல் வாயிலாக தகவல் அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com