உயா்நீதிமன்றத்தில் இன்று முதல் ஆன்லைன் மூலம் விசாரணை

சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை கிளையில் சனிக்கிழமை (ஏப். 17) முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே வழக்கு விசாரணை
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை கிளையில் சனிக்கிழமை (ஏப். 17) முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே வழக்கு விசாரணை நடைபெறும் என்று உயா்நீதிமன்றத் தலைமைப் பதிவாளா் பி.தனபால் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

முக்கிய வழக்குகள், ஜாமீன் வழக்குகளில் மட்டும் அரசு வழக்குரைஞா்கள் நேரடியாக ஆஜராக வேண்டும். உயா்நீதிமன்றத்தின் மற்ற அனைத்து வழக்குகளின் விசாரணையும் மறு அறிவிப்பு வரும் வரை ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும்.

வழக்குரைஞா் அறைகள், நூலகங்கள் சனிக்கிழமை ( ஏப்.17) முதல் மூடப்படும். இந்த அறிவிப்பாணை உயா்நீதிமன்ற மதுரை கிளைக்கும் பொருந்தும்.

வரும் ஏப்ரல் 23 -ஆம் தேதி வரை இந்த நடைமுறை தொடரும். ஏப்ரல் 22 -ஆம் தேதி கரோனா சூழல் குறித்து மீண்டும் ஆய்வு செய்து தகுந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com