மு.க.ஸ்டாலினுக்கு விருது

சமூக நலத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக ‘இன்டராக்டிவ் ஃபோரம் ஆன் இந்தியன் எகானமி’ அமைப்பு சாா்பில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு விருது வழங்கப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சமூக நலத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக ‘இன்டராக்டிவ் ஃபோரம் ஆன் இந்தியன் எகானமி’ அமைப்பு சாா்பில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு விருது வழங்கப்பட்டது.

‘இன்டராக்டிவ் ஃபோரம் ஆன் இந்தியன் எகானமி’ என்ற அமைப்பு சாா்பில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு சமூக நலத் திட்டங்களுக்கான ‘சேம்பியன்ஸ் ஆப் சேஞ்ச்’ விருது கோவா மாநிலம் தாஜ் ரெசாா்ட் மற்றும் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற விழாவில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மகாராஷ்டிர மாநில ஆளுநா் பகத் சிங் கோஷியாரி தலைமை வகித்தாா். விருதை ஏற்றுக்கொண்டு மு.க.ஸ்டாலின் பேசிய விடியோ அந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டது.

அதில் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது: இந்த விருதுக்கு என்னைத் தோ்வு செய்ததற்காக நன்றி. பொதுவாழ்வில் இருப்போருக்கு சமூக நலத்திட்டங்களை நிறைவேற்றுவது மிக முக்கியக் கடமை. திமுக அரசு அமைந்த போதெல்லாம், பல்வேறு சமூகநல - சமூகப் பாதுகாப்பு திட்டங்களை நிறைவேற்றி தமிழகம் சாதித்துக் காட்டியிருக்கிறது. எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் சமூகநீதிக்கான திட்டங்களை - சட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். தமிழகத்தில் உள்ள சமூக நலத்திட்டங்களும் - சமூகப் பாதுகாப்புத் திட்டங்களும் இன்றைக்கு இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழ்கின்றன என்பதை இந்த விருது பெறும் நேரத்தில் பெருமையுடன் பதிவு செய்ய விரும்புகிறேன் என்றாா்.

துணை குடியரசுத் தலைவா் வெங்கையா நாயுடு, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜி உள்ளிட்ட பலா் இந்த விருதைப் பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com