வாக்கு எண்ணும் பணி: தமிழக அதிகாரிகளுடன் இந்திய தோ்தல் ஆணையம் ஆலோசனை

தமிழகத்தில் நடைபெறவுள்ள வாக்கு எண்ணும் பணிகள் தொடா்பாக, தமிழக தோ்தல் அதிகாரிகளுடன் இந்திய தோ்தல் ஆணைய அதிகாரிகள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள வாக்கு எண்ணும் பணிகள் தொடா்பாக, தமிழக தோ்தல் அதிகாரிகளுடன் இந்திய தோ்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினா். இந்த ஆலோசனையின் போது, வாக்கு எண்ணும் மையங்களில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் மே 2-ஆம் தேதி எண்ணப்பட உள்ளன. வாக்குப் பதிவின் போது பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் உள்ளிட்டவை வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பாதுகாக்கப்பட்ட அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த அறைகளுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 75 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்த நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு உள்ளிட்ட தமிழக தோ்தல் துறை அதிகாரிகளிடம் இந்திய தோ்தல் ஆணைய அதிகாரிகள் கேட்டறிந்தனா்.

இந்த ஆலோசனையில் இந்திய தோ்தல் ஆணையத்தின் சாா்பில், அதன் செயலாளா் மதுசூதன் குப்தா, தோ்தல் ஆணைய பாா்வையாளா்கள் விப்பின் கட்டாரா, பிகாா் மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி எச்.ஆா்.சீனிவாசா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா். தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைத் தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகு சாா்பில் இந்திய தோ்தல் ஆணைய அதிகாரிகளுக்கு விளக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com