Enable Javscript for better performance
ஆம்னி பேருந்து தொழிலை காக்க நடவடிக்கை தேவை: உரிமையாளா்கள் கோரிக்கை- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    ஆம்னி பேருந்து தொழிலை காக்க நடவடிக்கை தேவை: உரிமையாளா்கள் கோரிக்கை

    By DIN  |   Published On : 20th April 2021 05:19 AM  |   Last Updated : 20th April 2021 05:19 AM  |  அ+அ அ-  |  

    bus1051158

    ஆம்னி பேருந்துகள்

    சென்னை: ஆம்னி பேருந்து தொழிலைக் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    இது தொடா்பாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத்தின் பொதுச் செயலா் அ.அன்பழகன் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில், தமிழகம் மற்றும் பிற மாநில உரிமம் பெற்ற 4, 000 ஆம்னி பேருந்துகள் உள்ளன. கரோனா பொதுமுடக்கம் காரணமாக, கடந்த ஆண்டு மாா்ச் மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்னி பேருந்துகள் படிப்படியாக இயக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் 600 பேருந்துகள் வரை இயக்கப்பட்டன.

    மீண்டும் அதிகரித்த கரோனா பரவல் காரணமாக பயணிகளின் வருகை குறைந்ததால், ஆம்னி பேருந்துகள் இயக்கம் 186 ஆக குறைந்தன.

    ரூ.480 கோடி இழப்பு: ஏற்கெனவே கடந்த ஓராண்டாக ஆம்னி பேருந்துகள் சரிவர இயங்காத காரணத்தால் எங்கள் தொழில் சாா்ந்தவா்களுக்கு சுமாா் ரூ.480 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசோ ரூ.20 கோடி அளவுக்கு மட்டுமே சாலை வரியை தள்ளுபடி செய்தது.

    இந்தத் தொழிலில் ரூ.1,500 கோடி முதலீடு உள்ளது. அதில் ரூ.1,000 கோடி அளவுக்கு வங்கிகளில் கடன் பெற்றே தொழில் செய்து வருகிறோம். பொதுமுடக்கத்தில் பேருந்துகள் இயங்காத காரணத்தால் வங்கிகளுக்கு சரிவர கடன் தவணை செலுத்த முடியவில்லை. இந்நிலையில் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ள இரவு நேர பொதுமுடக்கத்தால், எங்களது தொழில் முற்றிலும் பாதிக்கப்படும்.

    சாலை வரி தள்ளுபடி தேவை: இத்தொழிலைக் காப்பாற்றும் வகையில், சாலை வரியை 6 மாத கால அளவுக்கு தள்ளுபடி செய்ய வேண்டும். அடுத்த 6 மாதங்களுக்கு 50% சாலை வரியை மட்டும் வசூலிக்க வேண்டும்.

    கடன் தவணைக்கான ஆறுமாத கால வட்டியை தள்ளுபடி செய்தும், 6 மாதம் கடன் தவணை கட்டுவதற்கு கால அவகாசம் கொடுத்தும், அதே பேருந்துகளுக்கு கூடுதல் கடன் தொகை கொடுத்தும் உதவ வேண்டும். ஆம்னி பேருந்துகள் இயங்காத காலங்களுக்கு காப்பீட்டுக் கட்டணத்தை தள்ளுபடி செய்தும் தர வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

    பகலில் பேருந்துகள் இயக்கம்: இரவு நேர பொதுமுடக்கம் இருக்கும் காலங்களில் பகல் நேரங்களில் பயணிகளின் தேவைக்கு ஏற்ப, அரசு விதிகளைப் பின்பற்றி கூடுதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் தெரிவித்தனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp