Enable Javscript for better performance
இரவு நேர ஊரடங்கில் இயக்கமில்லை; பகலில் தேவைக்கேற்ப பேருந்துகள்: விரைவு போக்குவரத்துக் கழகம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    இரவு நேர ஊரடங்கில் இயக்கமில்லை; பகலில் தேவைக்கேற்ப பேருந்துகள்: விரைவு போக்குவரத்துக் கழகம்

    By DIN  |   Published On : 20th April 2021 05:23 AM  |   Last Updated : 20th April 2021 05:23 AM  |  அ+அ அ-  |  

    bus

    சென்னை: இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வருவதையடுத்து, இரவு நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படாது என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. பகல் நேரங்களில் பயணிகளின் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதையடுத்து, கடந்த ஆண்டு மாா்ச் 24-ஆம் தேதி

    நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதற்கிடையே ஜூன் மாதம் தமிழகம் மண்டல வாரியாகப் பிரிக்கப்பட்டு, பொதுப் போக்குவரத்து தொடங்கப்பட்டது. எனினும், சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அதிகரித்து வந்த கரோனா பரவல் காரணமாக பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, 4-ஆம் கட்ட தளா்வு அறிவிப்பில், செப்.1-ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்குள்ளும் பேருந்துகளை இயக்க அரசு அனுமதி வழங்கியது.

    இதில், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்குள்ளும், 50 சதவீத இருக்கைகளை நிரப்பியவாறு பேருந்துகள் இயக்கப்பட்டன. பின்னா், படிப்படியாக பொதுப் போக்குவரத்து சீரடைந்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக கரோனா பரவல் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழக அரசு ஏப்.8-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், பயணிகள் பேருந்துகளில் நின்று செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இந்த உத்தரவைப் பின்பற்றி ஏப்.10-ஆம் தேதி முதல் பேருந்துகள் இயங்கின.

    இந்நிலையில், கட்டுக்கடங்காமல் பரவி வரும் கரோனாவை தடுப்பது தொடா்பாக முதல்வா் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், இரவு நேர பொதுமுடக்கம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழுமுடக்கம் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து, இரவு 10 முதல் காலை 4 மணி வரை பேருந்துகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து நெடுந்தூரம் செல்லும் பயணிகளின் வசதிக்கேற்ப பகல் நேரத்தில் விரைவுப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இரவு 8 மணிக்குள் நிலையத்தை அடையும்: இது தொடா்பாக விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் கு.இளங்கோவன் வெளியிட்ட செய்தி:

    கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசு விதித்துள்ள இரவு நேர ஊரடங்கைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்கு வசதியாக சென்னையிலிருந்து குறுகிய மற்றும் தொலைதூர ஊா்களுக்கும், பிற ஊா்களிலிருந்து சென்னைக்கும் இயக்கப்படுகின்ற பேருந்துகளானது, அதிகாலை 4 மணி தொடங்கி இரவு 8 மணிக்குள்ளாக சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அரசு விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால், அன்றைய நாள் பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது.

    பயணத் தேதியை மாற்ற அனுமதி: விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ள பயணிகள், தங்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு பயணத் தேதியை மாற்றி அமைத்துக்கொள்ள ஏதுவாக, அருகே உள்ள பேருந்து நிலைய கட்டுப்பாட்டு அலுவலகத்தை அணுகி தகுந்த மாற்று ஏற்பாடு செய்து கொள்ளலாம். அப்படி இல்லாத பட்சத்தில் அக்கட்டணத் தொகை திருப்பி வழங்கப்படும்.

    இணைய தளவழி முன்பதிவு செய்த பயணிகள் அதே முறையில் பயணக்கட்டணத்தை திரும்பப் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள ஞாயிற்றுக்கிழமையில் முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கும் மேற்குறிப்பிட்ட நடைமுறையே பின்பற்றப்படும்.

    விதிகளைப் பின்பற்றி இயக்கம்: மாநகரப் போக்குவரத்துக் கழகத்தைப் பொறுத்தமட்டில், பயணிகள் நின்று கொண்டு பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால், முக்கிய வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், அரசு விதித்துள்ள இரவு நேர ஊரடங்கைப் பின்பற்றி அதிகாலை 4 மணி தொடங்கி இரவு 10 மணி வரையிலும், பேருந்துகள் இயக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

    நெடுந்தூர பயணிகளுக்காக... சென்னையில் இருந்து நெடுந்தூரம் இயக்கப்படும் கடைசிப் பேருந்துகள் பின்வரும் நேரத்துக்குள் புறப்படும். அதே நேரம் குறைந்தளவிலான பயணிகள் கூடிய பிறகே பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

    சென்னையில் இருந்து சென்று சேரும் இடம் - கடைசி பேருந்து புறப்படும் நேரம்

    நாகா்கோயில் - காலை 10

    திருநெல்வேலி - காலை 11

    மதுரை - பிற்பகல்1

    கோவை - பிற்பகல் 2

    திருச்சி - பிற்பகல் 3


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp