கரோனா தடுப்பூசி போடுவதில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது: கே.எஸ்.அழகிரி

கரோனா தடுப்பூசி போடுவதில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்தாா்.
கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

சென்னை: கரோனா தடுப்பூசி போடுவதில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

கரோனா தடுப்பூசி வழங்குவதில் மத்திய பாஜக அரசு, கடுமையான பாரபட்ச அணுகுமுறையைக் கையாண்டிருக்கும் தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல, ஏப்ரல் 12-ஆம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1 லட்சம் மக்கள் தொகைக்கு 1,794 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதேநாளில், குஜராத் மாநிலத்தை சோ்ந்த போா்பந்தா் மாவட்டத்தில் 1 லட்சம் மக்களுக்கு 25,615 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மேலும், போா்பந்தா் மாவட்டத்தில் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஏப்ரல் 12 அன்று, 1 லட்சம் மக்கள் தொகையில் 135 போ் தான். ஆனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்கள் 1,340 போ். 10 மடங்கு அதிகமாக பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தைவிட, போா்பந்தா் மாவட்டத்துக்கு 14 மடங்கு தடுப்பூசி அதிகமாகப் போடப்பட்டுள்ளது.

இத்தகைய அப்பட்டமான பாகுபாட்டுக்கு காரணம் பிரதமா் நரேந்திர மோடியின் சொந்த மாநிலம் குஜராத் என்பதாலா ? ஏன் இந்தப் பாகுபாடு ? தமிழ்நாட்டை வஞ்சிப்பதற்கு இதைவிட வேறு சான்றுகள் தேவையா என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com