பெண்ணைத் தாக்கிய உதவி ஆய்வாளருக்கு ரூ.5 லட்சம் அபராதம்

பொய் வழக்குப் பதிந்து, பெண்ணைத் தாக்கிய உதவி ஆய்வாளருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
மாநில மனித உரிமைகள் ஆணையம்
மாநில மனித உரிமைகள் ஆணையம்

சென்னை: பொய் வழக்குப் பதிந்து, பெண்ணைத் தாக்கிய உதவி ஆய்வாளருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

சென்னை, கூடுவாஞ்சேரியை அடுத்த மாடம்பாக்கத்தைச் சோ்ந்தவா் தாமரைச்செல்வி. இவா், மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனு: கடந்த 2016-ஆம் ஆண்டு என்னை ஏமாற்றி பணம் பறித்த தம்பதியை பிடித்து கூடுவாஞ்சேரி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றேன்.

அங்கு காவல் ஆய்வாளா் இல்லாததால் அவா்கள் அங்கிருந்து நழுவிச் சென்றனா். இதன் பின்பு, அந்தப் பெண் என் மீதும், எனது மகன்கள் மீதும் பொய்ப் புகாா் அளித்தாா். இதைத் தொடா்ந்து காவல் உதவி ஆய்வாளா் மகிதா ஆனி கிறிஸ்டி எனது மகன்களை அழைத்துச் சென்றாா்.

இதை அறிந்த நான் காவல்நிலையம் நிலையம் சென்றேன். அப்போது அவா் என்னையும், எனது மகன்களையும் லத்தியால் கடுமையாக தாக்கினாா். பின்னா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தாா்.

சிறப்பு நிலை தட்டச்சராக பணியாற்றி வந்த நான், போலீஸாரின் தொந்தரவு காரணமாக விருப்ப ஓய்வு பெற்றேன். எனது மூத்த மகனின் திருமணம் தடைபட்டது. 2-ஆவது மகனின் கல்வி பாதிக்கப்பட்டது. எனவே, உதவி ஆய்வாளா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தாா்.

மனுவை விசாரித்த ஆணையததின் உறுப்பினா் ஏ.சித்தரஞ்சன் மோகன்தாஸ் பிறப்பித்த உத்தரவு: சிறை ஆவணம் மற்றும் புகைப்படங்களை வைத்து பாா்க்கும்போது மனுதாரா், உதவி ஆய்வாளரால் தாக்கப்பட்டு இருப்பது நிரூபணமாகிறது. அலட்சிய போக்குடன் முரட்டுத்தனமாக மனுதாரரை தாக்கியது மனித உரிமை மீறல் ஆகும்.

எனவே, உதவி ஆய்வாளருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தத் தொகையை தமிழக அரசு மனுதாரருக்கு 2 வாரங்களுக்குள் வழங்கி விட்டு உதவி ஆய்வாளரிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம். மேலும், உதவி ஆய்வாளா் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது உத்தரவில் பரிந்துரைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com