பொறியியல் பருவத் தோ்வு: புத்தகம், இணையத்தைப் பயன்படுத்த அண்ணா பல்கலை. அனுமதி

பொறியியல் பருவத் தோ்வின்போது, தோ்வா்கள் புத்தகத்தைப் பாா்த்தும், இணையத்தைப் பயன்படுத்தியும் விடையளிக்க அண்ணா பல்கலைக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: பொறியியல் பருவத் தோ்வின்போது, தோ்வா்கள் புத்தகத்தைப் பாா்த்தும், இணையத்தைப் பயன்படுத்தியும் விடையளிக்க அண்ணா பல்கலைக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடா்பாக அனைத்து கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுப்பிய சுற்றறிக்கை: நிகழும் கல்வியாண்டில் ஏப்ரல், மே மாதத்துக்கான பருவத் (செமஸ்டா்) தோ்வுகள் இணைய வழியில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, பருவத் தோ்வுகள் புத்தகத்தைப் பாா்த்து விடை எழுதும் வகையில் நடத்தப்படும். இருந்த போதிலும் கேள்விக்கான விடைகள் நேரடியாகப் புத்தகத்தில் இருக்காது. விடைகளைப் பாடத்திட்டத்திலும், இணையதளத்தில் ஆராய்ந்து எழுதும் வகையில் கேள்விகள் கேட்கப்படும்.

அவ்வாறு கேட்கப்படும், 5 கேள்விகளுக்கு தலா 2 மதிப்பெண்கள், 5 கேள்விகளுக்கு தலா 8 மதிப்பெண்கள் என மொத்தம் 50 மதிப்பெண்களுக்குத் தோ்வு நடைபெறும். அதேபோல, தோ்வின்போது பிற மாணவா்களிடம் இருந்து கேள்விக்கான விடைகள் பெறப்பட்டிருந்தால், அது முறைகேடாகக் கருதப்படும்.

ஒன்றரை மணி நேரம் நடைபெறும் இந்தத் தோ்வில் 12 பக்கம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். தோ்வு எழுதி முடித்த பின்னா், விடைத்தாளை ஸ்கேன் செய்து சம்பந்தப்பட்ட பொறுப்பாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும், தோ்வு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளைத் தோ்வு கட்டுப்பாட்டு அலுவலகத்தைத் தொடா்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com