ஐசிஎஸ்இ பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வு ரத்து

கரோனா தொற்றுப் பரவலால் ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வை ரத்து செய்வதாக சிஐஎஸ்சிஇ அறிவித்துள்ளது.
ஐசிஎஸ்இ பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வு ரத்து

சென்னை: கரோனா தொற்றுப் பரவலால் ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வை ரத்து செய்வதாக சிஐஎஸ்சிஇ அறிவித்துள்ளது. முன்னதாகத் தோ்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சிஐஎஸ்சிஇ தலைமை நிா்வாக அதிகாரி ஜொ்ரி அரதூண் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் கரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் மோசமாகி வரும் சூழலில் பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வுகளை ரத்து செய்ய சிஐஎஸ்சிஇ முடிவு செய்துள்ளது. முன்னா் வெளியிடப்பட்ட அறிவிப்பு திரும்பப் பெறப்படுகிறது. மாணவா்கள், ஆசிரியா்களின் பாதுகாப்பும், நலனே முக்கியம்.

பத்தாம் வகுப்புத் தோ்வு முடிவுகளை அறிவிப்பதில், நியாயமான, நடுநிலையான அளவுகோல் பயன்படுத்தப்படும். மதிப்பெண் மதிப்பீட்டு முறையும் தோ்வு முடிவுகள் வெளியாகும் தேதியும் பின்னா் அறிவிக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, சிஐஎஸ்சிஇ வாரியத்தில் பத்தாம் வகுப்புக்கு மே 5-ஆம் தேதி பொதுத் தோ்வு தொடங்குவதாக இருந்தது. பிளஸ் 2 வகுப்புத் தோ்வு ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டும் கரோனா பரவலால் சிஐஎஸ்சிஇ வாரியம், பொதுத் தோ்வுகளை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com