பந்தல்குடி சீரடி சாய்பாபா கோவிலில் ராம நவமி சிறப்பு வழிபாடு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலில் ராமநவமி விழா மற்றும் உலக நன்மை வேண்டி சிறப்பு வழிபாடு புதன்கிழமை நண்பகலில் நடைபெற்றது.
அலங்காரத்தில் காட்சி தந்த பந்தல்குடி அருள்மிகு ஸ்ரீ சீரடி சாய்பாபா
அலங்காரத்தில் காட்சி தந்த பந்தல்குடி அருள்மிகு ஸ்ரீ சீரடி சாய்பாபா


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலில் ராமநவமி விழா மற்றும் உலக நன்மை வேண்டி சிறப்பு வழிபாடு புதன்கிழமை நண்பகலில் நடைபெற்றது.

மதுரை-தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் பந்தல்குடி அருகே அமைந்துள்ளது சீரடி சாய்பாபா கோவில். இக்கோவில் நிர்வாகத்தினர் சார்பில் பாபா பிறந்தநாளாகக் கருதப்படும் ராமநவமி விழாவைக் கொண்டாடும் விதமாகவும், உலக நன்மை வேண்டியும் சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

இதன் முதல் நிகழ்ச்சியாக இன்று காலை 11 மணிக்கு சிறப்பு வழிபாட்டுப் பாடல் நிகழ்ச்சி சீரடி சாய் பாபா பக்த சபா சார்பில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீடிசாய்பாபா உற்சவர் சிலைக்கு நண்பகல் 12 மணிக்கு தேன், வாழைப்பழம், பேரீச்சம் பழம், பலாப்பழம் ஆகியன கலந்த கலவை மூலமும் கஸ்தூரி மஞ்சள், கிழங்கு மஞ்சள், சந்தனம், விபூதி, குங்குமம், பன்னீர், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் கொண்டு அபிஷேகங்களும், தீப, தூப ஆராதனைகளும் செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அப்போது நண்பகல் ஆரத்தி பக்திப்பாடல் ஒலிபெருக்கிகள் மூலம் ஒலிக்கப்பட்டது. பின்னர் அருள்மிகு சீரடி சாய்பாபா சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகியும் தொழிலதிபருமான வி.சுந்தரமூர்த்தி செய்திருந்தார். கரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளின்படி இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தார் மட்டும் கலந்து கொண்டு வழிபட்டனர். பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com