வெள்ளக்கோவிலில் நடுரோட்டில் தீப்பிடித்த வேன்: 140 மூட்டைகள் தேங்காய் பருப்பு நாசம்

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே நடு ரோட்டில் வேனில் தீப்பிடித்ததால், 140 மூட்டைகள் தேங்காய் பருப்பு முற்றிலும் எரிந்து நாசமானது.
நடு ரோட்டில் தீப்பிடித்து எரியும் வேன்.
நடு ரோட்டில் தீப்பிடித்து எரியும் வேன்.

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே நடு ரோட்டில் வேனில் தீப்பிடித்ததால், 140 மூட்டைகள் தேங்காய் பருப்பு முற்றிலும் எரிந்து நாசமானது.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சேர்ந்தவர் சரவணகுமார் (40). தேங்காய் பருப்பு புரோக்கர். இவர் 140 மூட்டைகள் தேங்காய் பருப்புகளை தனது சொந்த ஊரில் வாங்கி, அங்கிருந்து திருப்பூர் மாவட்டம், காங்கயத்திலுள்ள ஒரு தனியார் எண்ணெய் ஆலைக்கு ஈச்சர் வேனில் ஏற்றி அனுப்பி வைத்தார்.

சிங்கம்புணரி, மேலத்தெரு, குமார் (40) வேனை ஓட்டி வந்தார். இந்த வேன் வெள்ளக்கோவில் அருகே மயில்ரங்கம் - கரட்டுப்பாளையம் சாலையில் வேலப்பநாயக்கன்வலசு பிரிவருகே வந்து கொண்டிருந்த போது தேங்காய் பருப்பு மூட்டைகளில் தீப்பிடித்தது தெரிய வந்தது. வேனின் பேட்டரியில் ஏற்பட்ட மின்சாரக் கோளாறால் தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது. 

வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, நிலைய அலுவலர் தனசேகரன், நிலைய போக்குவரத்து அலுவலர் வேலுச்சாமி மற்றும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர். அதற்குள் வேன் மற்றும் 150 மூட்டைகள் தேங்காய் பருப்புகள் முற்றிலும் எரிந்து நாசமானது.

சேத மதிப்பு ஏறத்தாழ ரூ.20 லட்சம் இருக்குமென கணக்கிடப்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஓட்டுநர் உள்பட யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com