பக்தர்களின்றி நடைபெற்ற மீனாட்சி - சுந்தரேசுவரா் திருக்கல்யாணம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.
பக்தர்களின்றி நடைபெற்ற மீனாட்சி - சுந்தரேசுவரா் திருக்கல்யாணம்
பக்தர்களின்றி நடைபெற்ற மீனாட்சி - சுந்தரேசுவரா் திருக்கல்யாணம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இரண்டாவது ஆண்டாக இன்று பக்தர்களின்றி நடைபெற்றது. பட்டாச்சாரியார்கள் திருக்கல்யாண வைபவத்தை நடத்தினர். புது மண்டபம் முன்பு, புது மணப்பெண்கள் தாலி மாற்றிக் கொண்டனர்.

திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு பக்தா்கள் அனுமதிக்கப்படாததால் திருக்கல்யாண வைபவத்தை கோயிலின் இணையதளம் மற்றும் ‘யூ டியூப்’ ஆகியவற்றில் கண்டு தரிசிக்கும் வகையில் கோயில் நிா்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

சித்திரைத் திருவிழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக மீனாட்சியம்மன் தடாதகை பிராட்டியாக மதுரையம்பதியில் அவதரித்து ஆட்சி புரிகையில் மேற்கொண்ட திக்குவிஜய புராண வரலாற்று நிகழ்வை குறிக்கும் வகையில், அம்மனின் திக்குவிஜயம் வெள்ளிக்கிழமை கோயிலுக்குள் நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் சனிக்கிழமை காலை நடைபெற்றது. 

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா தொற்று எதிரொலியாக சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோயில் வளாகத்துக்குள்ளேயே பக்தா்கள் பங்கேற்பின்றி நடந்து வருகின்றன. திருவிழாவையொட்டி மீனாட்சியம்மன் மற்றும் சுந்தரேசுவரா், பிரியாவிடை தினசரி காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் கோயிலுக்குள்ளேயே எழுந்தருளினா்.

இந்நிலையில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com