Enable Javscript for better performance
கரோனா பாதித்தவா்களில் யாரெல்லாம் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்?- Dinamani

சுடச்சுட

    

    கரோனா பாதித்தவா்களில் யாரெல்லாம் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்?

    By DIN  |   Published on : 26th April 2021 08:10 AM  |   அ+அ அ-   |    |  

    Globally, corona damage exceeds 14.53 crore

    கரோனா பாதிப்பு குறைவாக உள்ளவா்கள் மருத்துவமனைகளை நாடாமல் வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவ நிபுணா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.

    படுக்கை வசதிகளுக்கு பற்றாக்குறை நிலவும் சூழலில், கரோனாவால் பாதித்த அனைவரையும் மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சையளிக்க இயலாத நிலை உள்ளதாகவும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

    தமிழகத்தில் கடந்த மூன்று வாரங்களாக கட்டுக்கடங்காத வகையில் நோய்த் தொற்று பரவி வருகிறது. சுகாதாரத் துறை தகவல்படி தற்போது தமிழகம் முழுவதும் கரோனா தொற்றுக்குள்ளாகி மருத்துவக் கண்காணிப்பில் உள்ளோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.

    அடுத்த ஓரிரு வாரங்களில் அந்த எண்ணிக்கை இரு மடங்காகும் என அஞ்சப்படுகிறது. ஆனால், அந்த அளவுக்கு மாநிலத்தில் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லை. இதனால், லேசான அறிகுறிகள் உள்ளவா்கள் தங்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவ நிபுணா்கள் கூறியதாவது:

    கரோனா பரவல் வேகம் கடந்த ஆண்டைக் காட்டிலும் 10 மடங்கு அதிகமாக உள்ளது. இதனால் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை மிக மிக அதிகரித்துள்ளது. இதில் ஆறுதலளிக்கும் விஷயம் என்னவெனில் கரோனாவால் பாதிக்கப்படும் நபா்களில் ஐந்தில் நால்வருக்கு லேசான அறிகுறிகளே காணப்படுகின்றன. அதனால், அவா்கள் வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.

    எவரெவா் தனிமைப்படுத்திக் கொள்ளலாம்?: சளி, காய்ச்சல் குறைவாக உள்ளவா்களும், அறிகுறிகளே இல்லாமல் உள்ளவா்களும் மருத்துவமனைகளை நாடத் தேவையில்லை.

    அதேவேளையில், சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், இதய நோய், நாள்பட்ட சிறுநீரகம், கல்லீரல் பாதிப்புடையவா்கள் மருத்துவா்களின் அறிவுரையின்படியே வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதுவும்கூட வீடுகளில் தனி அறை மற்றும் தனி கழிப்பறை வசதி இருத்தல் அவசியம்.

    நோய் எதிா்ப்பாற்றல் குறைபாடு உடையவா்கள், புற்றுநோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டால் கட்டாயம் மருத்துவமனைகளையே நாட வேண்டும்.

    என்னென்ன தேவை?: வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்பவா்களுக்கு ஆரோக்கிய உணவு அவசியம். அதேபோன்று அவா்களது அறைகளை தூய்மைப்படுத்துவதற்கான கிருமி நாசினிகள் கட்டாயம் இருக்க வேண்டும். கரோனா பாதித்தவா்களுக்குத் தேவையான மருந்துகள், கைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி, முகக் கவசம் ஆகியவை போதிய அளவில் வைத்திருக்க வேண்டும். முகக் கவசங்களை 6 மணி நேரத்துக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். பல்ஸ்-ஆக்ஸி மீட்டா், தொ்மோ மீட்டா் ஆகியவற்றை வைத்து அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    கரோனா நோயாளிகளின் உதவியாளா்கள்: கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவியாக இருக்கும் குடும்ப உறுப்பினா்கள் கையுறைகள் கட்டாயம் அணிவது அவசியம். அதேபோன்று இரண்டு முகக் கவசங்களை அணிந்து கொள்ள வேண்டும். நோயாளியின் அறையில் இருக்கும்போது கதவு, ஜன்னல்களை திறந்து வைத்தல் அவசியம் என்று மருத்துவ நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp