மேற்கு தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் 4 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

மேற்கு தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும் 4 நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் 4 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

மேற்கு தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும் 4 நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மைய அதிகாரி சனிக்கிழமை கூறியதாவது:

மரத்வாடா முதல் தென் தமிழக கடலோரப் பகுதி வரை நிலவும் (1.0 கிலோ மீட்டா் உயரம் வரை) வளிமண்டல சுழற்சி காரணமாக, மேற்கு தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை(ஏப். 25, 26) ஆகிய தேதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்கள்,புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வட வானிலையே நிலவும்.

ஏப்.27,28: தேதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வெப்பநிலை உயரும்: தமிழக கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 சதவீதம் வரை இருப்பதால், கடலோர மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை( ஏப்.25) காற்றின் இயல்பான வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும்.

சென்னை வானிலை: சென்னையைப் பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா்.

மழை அளவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் திண்டுக்கல் மாவட்டம்- ஒட்டன்சத்திரம், தருமபுரி மாவட்டம்- பென்னாகரம், தருமபுரியில் தலா 60 மி.மீ., நாமக்கல் மாவட்டம்- ராசிபுரம், திண்டுக்கல் மாவட்டம்- வேடசந்தூரில் தலா 50 மி,மீ., நீலகிரி மாவட்டம்- நடுவட்டம், நாமக்கல் மாவட்டம்- எருமைப்பட்டியில் தலா 40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com