இந்தியாவுக்கு ரூ. 135 கோடி நிதியுதவி: கூகுள் அறிவிப்பு

இந்திய மக்களுக்கு  உதவும் வகையில் கூகுள் நிறுவனமும், கூகுள் ஊழியர்களும் இணைந்து ரூ. 135 கோடி நிதியுதவி வழங்குவதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். 
கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை
கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை

இந்திய மக்களுக்கு  உதவும் வகையில் கூகுள் நிறுவனமும், அதன் ஊழியர்களும் இணைந்து ரூ. 135 கோடி நிதியுதவி வழங்குவதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கரோனா பரவல் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில் நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் இந்திய மக்களுக்கு உதவும் நோக்கில், கூகுள் நிறுவனமும் ஊழியர்களும் இணைந்து ரூ. 135 கோடி நிதியுதவியை கிவ் இந்தியா(Giveindia), யுனிசெப்(UNICEF) ஆகிய நிறுவனங்களுக்கும் வழங்குவதாக கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். 

மேலும், கரோனா பாதிப்பால் இந்தியா பேரழிவை சந்தித்து வருவது கவலை அளிக்கிறது என்றும் இந்த நிதியுதவியின் மூலமாக கிடைக்கும் மருந்துப் பொருள்கள் அபாயக் கட்டத்தில் இருப்பவர்களுக்கு உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com