மன்னார்குடி: பேருந்தில் முகக்கவசம் அணிந்து பயணித்தவர்களுக்கு இலவசப் பயணச்சீட்டு

மன்னார்குடி பேருந்து நிலையத்தில் முகக்கவசம் அணிந்து, அரசு  நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் அனைவருக்கும் இலவசமாக பயணச்சீட்டு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
பேருந்தில் முகக்கவசம் அணிந்து பயணித்தவர்களுக்கு இலவசப் பயணச்சீட்டு
பேருந்தில் முகக்கவசம் அணிந்து பயணித்தவர்களுக்கு இலவசப் பயணச்சீட்டு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செயல்பட்டு வரும் ஜேசிஐ மன்னை அமைப்பின் சார்பாக, பொதுமக்களுக்கு கரோனா பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மன்னார்குடி பேருந்து நிலையத்தில் முகக்கவசம் அணிந்து, அரசு  நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் அனைவருக்கும் இலவசமாக பயணச்சீட்டு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மன்னை ஜேசிஐ அமைப்பின் தலைவர் எம்.சி. பிரகாஷ் தலைமை வகித்தார். முன்னாள் மண்டல தலைவர் வி. எஸ். கோவிந்தராஜன், முன்னாள் தலைவர்கள் ஜி.செல்வகுமார், எஸ். அன்பரசு, ஜி.ராஜகுமார், எஸ். ராஜகோபாலன், எம்.வி.முத்தமிழ்செல்வன், செயலர் பாரதி, பிரகாஷ், திட்ட இயக்குனர்கள் எஸ்.எஸ். தனபால், ஜி.மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில், மன்னார்குடி நகராட்சி காமராஜர் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டும் திருமக்கோட்டை, விக்கிரபாண்டியம், ஒரத்தூர், எடமேலையூர், வடபாதி ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நகர அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் முகக்கவசம் அணிந்த பயணிகள் அனைவரிடமும், ஜேசிஐ மன்னை அமைப்பினர், பயணிகள் செல்லும் ஊரைக் கேட்டறிந்து, அந்த பேருந்தின் நடத்துனரிடம், அதற்கு உண்டான பணத்தினை தந்து  பயணச் சீட்டினைப் பெற்று ,அதனைப் பயணிகளுக்கு இலவசமாக வழங்கினர். 

முகக் கவசம் அணியாத பயணிகள் மற்றும் பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டது. முகக் கவசம் அணிய வேண்டியதின் அவசியம் குறித்து விளக்கின. இதில், 200 பேர் பயன் அடைந்தனர். ஜேசிஐ மன்னை அமைப்பின் சார்பாக மன்னார்குடி தலைமை அஞ்சலகத்தில் தானியங்கி சானிடைசர் கருவி நிறுவப்பட்டது. தொடர்ந்து அனைத்து அரசு அலுவலகங்களிலும் வங்கிகளிலும் தானியங்கி சானிடைசர் கருவி நிறுவவும், தடுப்பூசி போட்டுக்கொள்ளும் தன்னார்வலர்களுக்கு பரிசுகள் வழங்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com