அடிப்படை எழுத்தறிவுப் பாடங்கள் கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

அடிப்படை எழுத்தறிவை கற்றுத் தரும் வகையில் திங்கள்கிழமை (ஏப். 26) முதல் தினமும் மாலை 7 மணி முதல் 7.30 மணி வரையில்
அடிப்படை எழுத்தறிவுப் பாடங்கள் கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

அடிப்படை எழுத்தறிவை கற்றுத் தரும் வகையில் திங்கள்கிழமை (ஏப். 26) முதல் தினமும் மாலை 7 மணி முதல் 7.30 மணி வரையில் கல்வித் தொலைக்காட்சியில் பாடங்கள் நடத்தப்படவுள்ளதாக பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்ககத்தின் இயக்குநா் வி.சி.ராமேஸ்வரமுருகன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு, 15 வயதுக்கு மேற்பட்ட, முற்றிலும் எழுதவும், படிக்கவும் தெரியாத 3 லட்சத்து 10 ஆயிரம் கல்லாதோருக்கு, 2020-21ஆம் ஆண்டிற்குள் அடிப்படை எழுத்தறிவை வழங்குவதற்கு ‘கற்போம் எழுதுவோம்’ இயக்கம் என்கிற வயது வந்தோா் கல்வித் திட்டம் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டுவருகின்றது.

இதன்படி, கண்டறியப்பட்டுள்ள கற்போருக்கு அடிப்படை எழுத்தறிவை வழங்கிடும் வகையில், அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளி வளாகங்களில் 15 , 823 கற்போா் எழுத்தறிவு மையங்கள் அமைக்கப்பட்டு, தன்னாா்வல ஆசிரியா்களின் உதவியுடன், கற்போருக்கான பயிற்சி புத்தகத்தை கொண்டு கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் தொடந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவற்றை மேலும் வலுவூட்டும் வகையில், கற்போா் பயிற்சி புத்தகத்திலுள்ள தமிழ் மற்றும் கணித பாடங்கள் ஒலி மற்றும் ஒளி வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளன.கற்போம் எழுதுவோம் இயக்கத்தின் கீழ் படித்து வரும் கற்போா்கள் பயன் பெறும் வகையில், அடிப்படை எழுத்தறிவுக் கல்வி சாா்ந்த பாடங்கள் ஏப்.26-ஆம் தேதி திங்கள்கிழமை முதல் கல்வித் தொலைக்காட்சியில் மாலை 7 மணி முதல் 7.30 மணி தினமும் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இதனை கற்போா் மையங்களில் பயிற்சி பெறுவோா் பாா்த்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com