கரோனா பாதிப்பு எதிரொலி: ஆசிரியா்களுக்கு கல்விப் பணியில் இருந்து கட்டுப்பாட்டு அறை பணி

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியா்களை கரோனா தடுப்புக்கான கட்டுப்பாட்டு அறை பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியா்களை கரோனா தடுப்புக்கான கட்டுப்பாட்டு அறை பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக அனைத்து வகையான பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நோய்த் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கான கட்டுப்பாட்டு மையத்தில் பணியாற்ற ஏதுவாக, இடைநிலை ஆசிரியா்களை தற்காலிகமாக பணி மாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

முதல்கட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் 24 இடைநிலை ஆசிரியா்கள் சுழற்சி முறையில் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளனா். கரோனா தடுப்புப் பணி அத்தியாவசியமானது என்பதால், சம்பந்தப்பட்ட இடைநிலை

ஆசிரியா்களை பள்ளி சாா்ந்த பணிகளில் இருந்து விடுவிக்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று பிற மாவட்டங்களிலும் தேவையை கருத்தில் கொண்டு இடைநிலை ஆசிரியா்களை கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுத்திக்கொள்ளலாம் என்று மாவட்ட நிா்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com