வைத்தீஸ்வரன் கோவிலில் பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு விழா

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. 
வைத்தீஸ்வரன் கோவிலில் பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு விழா

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. 

இக்கோவிலில் தனி சன்னதிகளில் செல்வமுத்துக் குமாரசாமி செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் தன்வந்திரி ஆகிய சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர். தீராத நோய்களைத் தீர்க்கும் தலமாக இக்கோயில் விளங்கி வருகிறது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை 29ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி தமிழக அரசின் கொரோனோ பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உள்பட்டு பக்தர்கள் பங்கேற்பின்றி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. 

விழாவையொட்டி  எட்டு கால யாகசாலை பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள ஆதி வைத்தியநாதர் சன்னதி, தட்சிணாமூர்த்தி, சன்னதி, துர்க்கை அம்மன் சன்னதி, விநாயகர், நடராஜர் ஆகிய கோயில் உள்பிரகாரத்தில் உள்ள பரிவார தெய்வங்கள் சன்னதிகளுக்கு விமான கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. 

இதில் தர்மபுரம் ஆதீனம் 27வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று தரிசனம் செய்தார் .நாளை நான்கு ராஜகோபுரங்கள் கற்பக விநாயகர் வைத்தியநாதசுவாமி தையல் நாயகி அம்பாள் செல்வ முத்துக்குமாரசாமி அங்காரகன் ஆகிய சுவாமி மூலவர் விமானங்கள் விமான கலசங்களுக்கு குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com