கீழடி அகழாய்வில் முதுமக்கள் தாழிகளில் குறியீடுகளுடன் கூடிய வண்ண நிற பானைகள் கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்றுவரும் ஏழாம் கட்ட ஆய்வில் கொந்தகையில் முதுமக்கள் தாழியில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட குறியீடுகளுடன் கூடிய வண்ண நிற பானைகள் புதன்கிழமை கண்டெடுக்க
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி ஏழாம் கட்ட ஆய்வில் கொந்தகை என்ற இடத்தில் கிடைத்த முதுமக்கள் தாழியில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட குறியீடுகளுடன் கூடிய வண்ண நிற பானைகள்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி ஏழாம் கட்ட ஆய்வில் கொந்தகை என்ற இடத்தில் கிடைத்த முதுமக்கள் தாழியில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட குறியீடுகளுடன் கூடிய வண்ண நிற பானைகள்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்றுவரும் ஏழாம் கட்ட ஆய்வில் கொந்தகையில் முதுமக்கள் தாழியில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட குறியீடுகளுடன் கூடிய வண்ண நிற பானைகள் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருப்புவனம் அருகேயுள்ள கீழடியை அடுத்துள்ள அகரம், கொந்தகை ஆகிய இடங்களில் 7 ஆம் கட்ட அகழாய்வு கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது. கீழடி, கொந்தகையில் தலா மூன்று குழிகளும், அகரத்தில் ஒரு குழியும் அகழாய்வுக்காக தோண்டப்பட்டுள்ளன.
கொந்தகையில் 3 குழிகள் தோண்டப்பட்டு இதுவரை 7 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் மூன்று மற்றும் நான்காம் எண் கொண்ட முதுமக்கள் தாழிகளில் உள்ள பொருள்கள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன.

இதில், 3- ஆம் எண் கொண்ட தாழி முழுமையாக கிடைத்ததால் உள்ளே உள்ள எலும்புகள், கருப்பு சிவப்பு வண்ண பானைகள், இரும்பிலான ஆயுதம் உள்ளிட்டவைகள் வெளியே எடுக்கப்பட்டு ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. 

இதில் சிறிய வடிவிலான கருப்பு, சிவப்பு வண்ண பானைகளில் ஒரே மாதிரியான குறியீடுகள் காணப்பட்டுள்ளன. இது உணவு பாத்திரம் அல்லது உணவு குவளை என அழைக்கப்படுகிறது. 

19 செ.மீ விட்டமுள்ள இந்த  உணவு பாத்திரத்தின் உயரம் 4.5 செ.மீ ஆக உள்ளது. மற்றொரு பாத்திரம் 14 செ.மீ விட்டமும் 16 செ.மீ உயரமும் கொண்டதாக உள்ளது. மற்றொரு பாத்திரம் சேதமடைந்த நிலையில் உள்ளது. 

மூன்று குறியீடுகளும் எதனை குறிக்கிறது என்பது குறித்து அடுத்த கட்ட ஆய்விற்கு பின் தெரியவரும். 6 ஆம் கட்ட அகழாய்வில் 42 குழிகளில் 39 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. 

அதில் 20 எலும்பு கூடுகள் வெளியே எடுக்கப்பட்டன. அதிலும் ஒருசில முதுமக்கள் தாழிகளில் இதுபோன்ற கருப்பு சிவப்பு வண்ண பாத்திரங்கள் வெளியே எடுக்கப்பட்டன.

ஆனால் அதில் குறியீடுகள் எதுவும் இல்லை. 7 ஆம் கட்ட அகழாய்வில் இதுவரை வெளியே எடுக்கப்பட்டுள்ள இரண்டு முதுமக்கள் தாழிகளிலும் குறியீடுகள் உடைய இருவண்ண பாத்திரங்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் 6 ஆம் கட்ட அகழாய்வில் வெளியே எடுக்கப்பட்ட எலும்புகளை மதுரை காமராசர் பல்கலை கழகம் லக்னோவில் உள்ள பீர்பால் ஷாகினி இன்ஸ்டியூட் ஆப் பேலியோ சயின்ஸ் ஆய்வு கூடத்திற்கு ஆய்விற்காக அனுப்பியுள்ளது.

வடமாநிலங்களில் கரோனோ பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து ஆய்வகம் மூடப்பட்டு கரோனோ வார்டாக மாற்றப்பட்டதாகவும் ஆய்வு பணிகள் நடைபெறவில்லை என்றும் கூறப்படுகிறது. 

எனவே எலும்புகளின் டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் வருவதில் மிகவும் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com