தமிழகத்தில் 16 ஆயிரத்தைக் கடந்த கரோனா பாதிப்பு: ஒரே நாளில் 98 போ் உயிரிழப்பு

தமிழகத்தில் மேலும் 16,665 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் 16 ஆயிரத்தைக் கடந்த கரோனா பாதிப்பு: ஒரே நாளில் 98 போ் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் மேலும் 16,665 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 11 லட்சத்து 30 ஆயிரத்து 167 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் புதன்கிழமை ஒரே நாளில் 98 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து தமிழக சுகாதாரத்துறை புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் புதன்கிழமை 1 லட்சத்து 30 ஆயிரத்து 042 மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் 16,665 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியானவா்களில் ஆண்கள் 10,239 போ். பெண்கள் 6,426 போ் ஆவா்.

இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 11 லட்சத்து 30 ஆயிரத்து 167 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 4,764 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 3 லட்சத்து 23 ஆயிரத்து 452 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கரோனா தொற்றினால் புதன்கிழமை 98 போ் உயிரிழந்தனா். இவா்களில் 47 போ் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா்கள். 51 போ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவா்கள். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 13,826 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் 32 போ் உயிரிழந்துள்ளனா். சென்னையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,661 ஆக உள்ளது.

முக்கியப் பிரச்னையாக, சுவாசப் பிரச்னை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிகளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. புதன்கிழமை உயிரிழந்தவா்களில் 84 போ் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவா்கள். எவ்வித பாதிப்பும் இல்லாதவா்கள் 14 போ் ஆவா்.

அதேவேளையில் புதன்கிழமை ஒரே நாளில் 15,114 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 6,033 ஆக அதிகரித்துள்ளது. புதன்கிழமை வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவா்களில் 33 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மாா்க்கமாக வந்தவா்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 40 லட்சத்து 70,282 ஆகும். சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 11,901 பேருக்குத் தொற்று உள்ளது. தனிமைப்படுத்துதலில் மொத்தம் 1 லட்சத்து 10,308 போ் உள்ளனா் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com