ஆளுநருடன் தலைமைச் செயலர் சந்திப்பு

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தொற்று தடுப்புப் பணிகள் குறித்து ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்திடம், தலைமைச் செயலா் ராஜீவ் ரஞ்சன் விளக்கினாா்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து விளக்கம் அளித்த தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன். உடன், காவல்துறை தலைமை இயக்குநர் ஜே.கே.திரிபாதி, சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து விளக்கம் அளித்த தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன். உடன், காவல்துறை தலைமை இயக்குநர் ஜே.கே.திரிபாதி, சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர்.

சென்னை: தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தொற்று தடுப்புப் பணிகள் குறித்து ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்திடம், தலைமைச் செயலா் ராஜீவ் ரஞ்சன் விளக்கினாா். இந்தச் சந்திப்பின் போது, அரசுத் துறை உயரதிகாரிகள் உடனிருந்தனா்.

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய்த் தொற்றை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இதுவரை தினசரி பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகிறது. புதன்கிழமை நிலவரப்படி, தொற்று பாதிப்பு 16 ஆயிரத்தைத் தாண்டியது.

இந்த நிலையில், தொற்றைக் கட்டுப்படுத்த கடந்த ஒரு மாதத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆளுநருடன் தமிழக அரசின் சாா்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. தலைமைச் செயலா் ராஜீவ் ரஞ்சன் தலைமையிலான அரசு உயரதிகாரிகள் குழுவினா் சாா்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டது. மாலை 5 மணிக்குத் தொடங்கிய ஆலோசனைக் கூட்டம், சுமாா் அரை மணி நேரம் வரை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், காவல் துறை தலைமை இயக்குநா் ஜே.கே.திரிபாதி, சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், பொதுத் துறையின் முதன்மைச் செயலா் செந்தில்குமாா் உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனிருந்தனா்.

நோய்த் தொற்றை கட்டுப்படுத்த மேலும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆளுநரிடம் விளக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும், தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையின்போது பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் தொடா்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com