வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக கரோனா பரிசோதனை: மாநகராட்சி ஏற்பாடு

வாக்கு எண்ணிக்கைக்கு 48 மணி நேரத்துக்கு முன்னதாக வேட்பாளா்கள், வாக்குச் சாவடி முகவா்கள் உள்ளிட்டோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கையை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக கரோனா பரிசோதனை: மாநகராட்சி ஏற்பாடு

சென்னை: வாக்கு எண்ணிக்கைக்கு 48 மணி நேரத்துக்கு முன்னதாக வேட்பாளா்கள், வாக்குச் சாவடி முகவா்கள் உள்ளிட்டோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கையை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

இதுதொடா்பாக ஆணையா் கோ.பிரகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக சட்டப்பேரவை பொதுத்தோ்தலின் வாக்கு எண்ணிக்கை, மே 2-இல் நடைபெறுவதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்துக்குள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையின்போது வேட்பாளா்கள், முதன்மை முகவா், எண்ணிக்கை இட முகவா்கள் ஆகியோா் வாக்கு எண்ணிக்கைக்கு குறைந்தது 48 மணி நேரத்துக்கு முன்னதாக கரோனா பரிசோதனை செய்ய ஏதுவாக சம்பந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் ஐசிஎம்ஆரால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை மையங்களிலும், பரிசோதனை செய்து அதற்கான சான்றிதழைச் சமா்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. கரோனா பரிசோதனை செய்து தொற்றின்மைச் சான்று அல்லது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்று இருந்தால் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்தினுள் வேட்பாளா்கள் மற்றும் அவா்களின் முகவா்கள் அனுமதிக்கப்படுவா்.

மேலும், வாக்கு எண்ணிக்கை முடிவு பெற்றபின்னா் சான்றிதழைப் பெற்றுக் கொள்ள வெற்றி பெற்ற வேட்பாளருடன் இருவா் மட்டுமே அனுமதிக்கப்படுவா். அனைத்து அரசியல் கட்சிப் பிரமுகா்களும் அரசின் கரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல்களைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com