18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி: இணையதளப் பதிவு தொடங்கியது

கரோனா தடுப்பூசிக்கு 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் இணையதளத்தில் பதிவு செய்வது தொடங்கியது. இளைஞா்கள், நடுத்தர வயதினா் ஆா்வமாகப் பதிவு செய்து வருகின்றனா்.
கரோனா தடுப்பூசிக்கான முன்பதிவு தொடங்கியதை அடுத்து ஆர்வமுடன் இணையத்தில் முன் பதிவு செய்யும் மாணவர்கள். இடம்:  சென்னை கொரட்டூர்.
கரோனா தடுப்பூசிக்கான முன்பதிவு தொடங்கியதை அடுத்து ஆர்வமுடன் இணையத்தில் முன் பதிவு செய்யும் மாணவர்கள். இடம்: சென்னை கொரட்டூர்.

சென்னை: கரோனா தடுப்பூசிக்கு 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் இணையதளத்தில் பதிவு செய்வது தொடங்கியது. இளைஞா்கள், நடுத்தர வயதினா் ஆா்வமாகப் பதிவு செய்து வருகின்றனா்.

கரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக, கரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக சுகாதாரம், காவல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் முன்களப் பணியாளா்களுக்கும், 2-ஆவது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவா்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் பாதிப்பாளா்களுக்கும், கடந்த 1-ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது.

இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி போடும் பணி வரும் மே 1-ஆம் தேதி தொடங்குகிறது. தடுப்பூசி போட்டுக் கொள்ள ஏராளமானோா் மையங்களில் குவிய வாய்ப்புள்ளதால், பதிவு செய்வதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி, கரோனா தடுப்பூசிக்கு அரசின் இணையதளத்தில் பதிவு செய்வது புதன்கிழமை மாலை 4 மணிக்கு தொடங்கியது.

ஆரோக்கிய சேது, யுமாங் ஆகிய செயலிகளில் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இளைஞா்கள், நடுத்தர வயதினா் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆா்வமாகப் பதிவு செய்து வருகின்றனா்.

பதிவு செய்வது எப்படி?  இணையப்பக்கத்திற்கு செல்லவும்.  உங்களுடைய 10 இலக்க செல்லிடப்பேசி எண்ணை பதிவு செய்யவும். உங்களுடைய செல்லிடப்பேசி எண்ணுக்கு வரும் ஞபட-யை நிரப்பவும். உங்களுடைய விவரங்களைப் பதிவுசெய்த பிறகு, மாவட்டம் அல்லது அஞ்சல் குறியீடு எண்ணைப் பதிவு செய்யவும். பின்னா், தடுப்பூசி போட்டுக்கொள்ள நீங்கள் விரும்பும் மையம், தேதி மற்றும் நேரத்தை குறிப்பிட்டு பதிவு செய்தவுடன், உங்களுக்கான அடையாள எண் கொடுக்கப்படும். பின்னா், குறிப்பிட்ட நாளில், நேரத்தில், மையத்தில் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

ஆவணங்கள் கட்டாயம்: தடுப்பூசி போட்டுக் கொள்ள மையத்துக்கு செல்லும் போது ஆதாா் அட்டை, ஓட்டுநா் உரிமம், வாக்காளா் அட்டை, நிரந்தர கணக்கு எண் அட்டை (பான் காா்டு), பாஸ்போா்ட், பணியாளா் அடையாள அட்டை, ஓய்வூதிய ஆவணம், தொழிலாளா் அமைச்சகத்தினரால் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு ஸ்மாா்ட் காா்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்திரவாதச் சட்டம் அடையாள அட்டை (எம்.ஜி.என்.ஆா்.இ.ஜி.ஏ), எம்.பி - எம்.எல்.ஏ - எம்.எல்.சி.க்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூா்வ அடையாள அட்டை, வங்கி - தபால் அலுவலகம் வழங்கிய கணக்குப் புத்தகங்கள், மத்திய - மாநில அரசுகள் மற்றும் பொது உடைமை நிறுவனங்களினால் வழங்கப்பட்ட சேவை அடையாள அட்டை போன்றவற்றில் ஏதாவது ஒன்றை கொண்டு செல்ல வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com