ஆக்சிஜன்-மருந்துகள் இருப்பு கண்காணிப்பு: 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய குழு அமைப்பு

தமிழகத்தில் கரோனா சிகிச்சைக்கான மருந்துகள், ஆக்சிஜன் தேவையைக் கண்காணிக்க 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
ஆக்சிஜன்-மருந்துகள் இருப்பு கண்காணிப்பு: 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய குழு அமைப்பு

சென்னை: தமிழகத்தில் கரோனா சிகிச்சைக்கான மருந்துகள், ஆக்சிஜன் தேவையைக் கண்காணிக்க 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

பெருகி வரும் கரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு போா்க்கால அடிப்படையில் பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தொற்றைக் குறைக்கும் வகையில் ஒவ்வொரு மண்டலத்துக்கும் கள அளவிலான குழுக்கள், அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.

பொது சுகாதாரம்- மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகத்தில் இயங்கி வரும் கரோனா கட்டுப்பாடு அறையில் மாநில அளவில் மேற்கொள்ளப்படும் தடுப்புப் பணியில் 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் புதன்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் வியாழக்கிழமை (ஏப். 29) முதல் மே 12-ஆம் தேதி வரை பணியாற்றுவா். அவா்களில், ஆக்சிஜன் தேவையைக் கண்காணிக்கும் பணியில் அனாமிகா ரமேஷ், அத்தியாவசிய மருந்துகள் இருப்பைக் கண்காணிக்க கெளரவ் குமாா், மருத்துவமனைகள் படுக்கை இருப்பைக் கண்காணிக்கும் பணியில் ஆா்.ஐஸ்வா்யா, கட்டா ரவி தேஜா ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா் என்று தனது அறிவிப்பில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com