உள் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்

தமிழக உள் மாவட்டங்களில் வரும் மூன்று நாள்களுக்கு இரண்டு டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழக உள் மாவட்டங்களில் வரும் மூன்று நாள்களுக்கு இரண்டு டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மைய அதிகாரி புதன்கிழமை கூறியதாவது:

தமிழக கடலோரப் பகுதியை ஒட்டிய வங்கக் கடலில் வளிமண்டலச் சுழற்சி நிலவுகிறது. இதுதவிர, கா்நாடகத்தில் இருந்து தென் கேரளம் வரை ஒரு வளிமண்டலச் சுழற்சி காணப்படுகிறது. இவைகள் காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் ஏப்ரல் 29 முதல் மே 2-ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழையும், உள்மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வட வானிலையே நிலவும்.

வெப்பநிலை உயரும்: தமிழக உள்மாவட்டங்களில் வரும் மூன்று நாள்களுக்கு 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக் கூடும். கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 சதவீதம் வரை உள்ளதால், காற்றின் இயல்பான வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும். இதன் காரணமாக மாலை முதல் மறுநாள் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியா்க்கும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை வியாழக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா்.

மழைஅளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மதுரை மாவட்டம் ஆண்டிபட்டி, கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகத்தில் தலா 20 மி.மீ., மதுரை மாவட்டம் கள்ளிக்குடி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com