நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆடிப்பூர திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றம்.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றம்.

திருநெல்வேலி: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆடிப்பூர திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டுக்கான திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.

4-ஆவது திருநாளான புதன்கிழமை (ஆக.4) நண்பகல் 12 மணிக்கு காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் சிறப்பாக நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு ஸ்ரீகாந்திமதி அம்மன் உள்பிரகாரத்தில் உலா சென்று  சந்நிதி வந்து சேரும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

10-ஆவது திருநாளான செவ்வாய்க்கிழமை (ஆக. 10) இரவு 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் திருக்கோயிலில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து ஆடிப்பூர முளைக்கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 

வாயில் முன்பு திருமுறை: கரோனா நோய்த் தொற்றின் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்களில் பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் கொடியேற்ற நிகழ்வுக்கும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கோயில் முன்பு கிழக்கு ரதவீதியில் திரண்ட பக்தர்கள் திருமுறை பாடி வழிபாடு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com