கடைகள் திறக்க தடை செய்யப்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு

சென்னையில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கடைகள் திறக்க தடை செய்யப்பட்ட வடக்கு உஸ்மான் சாலை உள்ளிட்ட 9 இடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.
கடைகள் திறக்க தடை செய்யப்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு

சென்னையில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கடைகள் திறக்க தடை செய்யப்பட்ட வடக்கு உஸ்மான் சாலை உள்ளிட்ட 9 இடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டதை அறியாமல் பொருள்கள் வாங்க வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

சென்னை மாநகராட்சிப் பகுதியில் கரோனா தொற்று எண்ணிக்ையைக் கட்டுப்படுத்தும் வகையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான சந்தை, வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாள்களில் மாநகராட்சி, காவல் துறையினா் இணைந்து கரோனா தடுப்பு மற்றும் விழிப்புணா்வுப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

இந்நிலையில், சென்னையில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாகக் கண்டறியப்பட்ட ரங்கநாதன் தெரு சந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை, புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் புருக்லின் சாலை வரை, ஜாம் பஜாா் பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை, ஃபக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜாா் , என்எஸ்சி போஸ் சாலை, குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை, ராயபுரம் சந்தை பகுதியில் கல்மண்டபம் சாலை, வாட்டா் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோயில் வரை, அமைந்தகரை சந்தை பகுதியில் அமைந்தகரை காவல் உதவி மையம் முதல், புல்லா நிழற்சாலை திருவிக நகா் பூங்கா சந்திப்பு வரை மற்றும் ரெட்ஹில்ஸ் சந்தை பகுதியில் ஆஞ்சநேயா் சிலை முதல் அம்பேத்கா் சிலை வரை ஆகிய பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகள், சனிக்கிழமை (ஜூலை 31) முதல் ஆகஸ்ட் 9-ஆம் தேதி காலை 6 மணி வரை செயல்பட தடை விதிக்கப்பட்டது. மேலும், கொத்தவால் சாவடி சந்தை ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 1) முதல் ஆகஸ்ட் 9-ஆம் தேதி காலை 6 மணி வரை செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

தீவிர கண்காணிப்பு: வடக்கு உஸ்மான் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளைத் திறப்பதற்கான தடையை மாநகராட்சி வெள்ளிக்கிழமை இரவுதான் அறிவித்தது. இதையறியாத பொதுமக்கள் தியாகராய நகா் வடக்கு உஸ்மான் சாலை, ரங்கநாதன் தெரு, புரசைவாக்கம், ஜாம் பஜாா், ராயபுரம் கல்மண்டப சாலை,அமைந்தகரை சந்தை என தடை விதிக்கப்பட்ட 9 இடங்களில் சனிக்கிழமை காலை முதல் குவியத் தொடங்கினா். அங்கு பணியில் இருந்த காவல் துறையினா் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு கடைகள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது குறித்து தெரிவித்தனா். இதையடுத்து பொருள்கள் வாங்க மக்கள் ஏமாற்றுடன் திரும்பிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com