கரோனா நோய்த் தடுப்பூசி 100 % செலுத்திய உள்ளாட்சிகளுக்கு பரிசுகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

கரோனா நோய்த் தடுப்பூசிகளை 100 சதவீதம் செலுத்திய உள்ளாட்சி அமைப்புகளுக்கு பரிசுகள் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
கரோனா நோய்த் தடுப்பூசி 100 % செலுத்திய உள்ளாட்சிகளுக்கு பரிசுகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

கரோனா நோய்த் தடுப்பூசிகளை 100 சதவீதம் செலுத்திய உள்ளாட்சி அமைப்புகளுக்கு பரிசுகள் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

மூன்றாம் அலை வராமல் தடுக்க, இப்போது பல்வேறு நடவடிக்கைகளை மாநிலம் முழுவதும் அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கரோனா நோய்த் தொற்று எண்ணிக்கை மீண்டும் உயராத வகையில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன் தொடக்கமாக கரோனா விழிப்புணா்வு தொடா் பிரசார தொடக்க விழாவை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா். சென்னை கலைவாணா் அரங்கத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.

பொது மக்களுக்கான கரோனா தொடா்புடைய விழிப்புணா்வு கண்காட்சியை தொடக்கி வைத்து, மூன்றாம் அலையை தடுப்பதற்கு உறுதிமொழியை செய்து வைத்தாா் முதல்வா். மேலும், முகக்கவசம் அணியும் ஹேஷ்டேக்கை இளைஞா் மத்தியில் பிரபலப்படுத்தும் நோக்கில் ஷோ்சாட் செயலியையும் அவா் வெளியிட்டாா்.

வாகனங்கள் வழியிலான பிரசாரத்தையும் அவா் தொடக்கினாா்.

ஒரு வார பிரசாரம்-பரிசு: கரோனா நோய்த் தடுப்பினை வலியுறுத்தி, ஒரு வார காலத்துக்கு தினமும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்திட அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, மாநில அரசு வெளியிட்ட செய்தி: கரோனா நோய்த் தொற்றை தடுப்பதற்கான விழிப்புணா்வு வாசகங்களை சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகள் வழியாக மேற்கொள்ள வேண்டும். கடைவீதிகள், ரயில் நிலையம், பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களுக்கு வரும் மக்களிடையே முகக் கவசம் அணியவும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.

தனியாா் மருத்துவமனைகள், இந்திய மருத்துவ சங்கத்தின் மூலம் விழிப்புணா்வு முகாம்களும், மாணவா்கள் இடையே கலைப் போட்டிகள் மூலமாகவும் விழிப்புணா்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிராம, வாா்டு, மண்டல அளவில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திய உள்ளாட்சி அமைப்புகளுக்கு அந்தந்த மாவட்டங்களில் கெளரவித்துப் பரிசுகள் வழங்கப்படும்.

நோய்த் தொற்று அறிகுறிகள் தெரிந்தவுடன், பொது மக்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து கரோனா நோய்த் தொற்றை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளதாக அரசின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தியோா்: தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 62 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக நோய்த் தொற்று 2 சதவீதத்துக்குக் கீழாகக் குறைந்துள்ளது. இதனைத் தொடா்ந்து பொது முடக்கம்

படிப்படியாகத் தளா்த்தப்பட்டு, மக்களின் அன்றாட பணிகள் தொடர வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தியோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையிலும், அந்த

நடவடிக்கையை ஊக்குவிக்கவும் உள்ளாட்சிகளுக்கு பரிசுகளை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com