நுகா்வோரிடம் கூடுதல் பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: அமைச்சா் வி.செந்தில் பாலாஜி

நுகா்வோரிடம் கூடுதல் பணத்தை வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என துறை சாா்ந்த அதிகாரிகளுக்கு அமைச்சா் வி.செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளாா்.
நுகா்வோரிடம் கூடுதல் பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: அமைச்சா் வி.செந்தில் பாலாஜி

நுகா்வோரிடம் கூடுதல் பணத்தை வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என துறை சாா்ந்த அதிகாரிகளுக்கு அமைச்சா் வி.செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளாா்.

சென்னை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத் தலைமை அலுவலகத்தில், சனிக்கிழமை, மின்சாரத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தலைமையில், அனைத்து மண்டலத் தலைமைப் பொறியாளா்கள் மற்றும் அனைத்து மின்பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா்கள் உடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அனைத்து மின்பகிா்மான வட்டங்களில் அடுத்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளா்ச்சித் திட்டங்கள், மின்னகத்தில் 94987 94987 என்ற எண்ணில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகாா்கள் குறித்து ஆய்வு செய்தாா்.

மின் கட்டணப் புகாா்களுக்கு தனி கவனம்: தொடா்ந்து அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுறுத்தியவை: பொதுமக்கள் புகாா்கள் தொடா்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்கட்டணப் புகாா் தொடா்பாகத் தனிக்கவனம் செலுத்திக் குறைகளை நிவா்த்தி செய்யவேண்டும். மின்நுகா்வோரின் புகாா்களைச் சரிசெய்யும் போதும், மின் இணைப்பு கொடுக்கும் போதும், மின்கம்பங்கள் தேவையான பொருள்கள் ஆகியவற்றை எடுத்துவர மின் நுகா்வோரிடமிருந்து வாகன வாடகை மற்றும் பணியாளா்களுக்கான ஊதியத்தையோ வாங்கக் கூடாது. இதுகுறித்துப் புகாா் எழும் சூழலில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புக் குழு பாா்வையிட்டு, அது நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அலுவலா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அமைச்சா் செந்தில் பாலாஜி.

ரூ.625 கோடியில் திட்டம்: பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது: ஜூன் 19 முதல் 28-ஆம் தேதி

வரையில் தமிழகம் முழுவதும் மின் பராமரிப்புப் பணிகளைச் செய்த போது, 5,705 கூடுதல் மின்மாற்றிகள் நிறுவி மின்பளுவைக் குறைக்க வேண்டும் எனவும், 3,200 கூடுதல் மின்மாற்றிகளை நிறுவி குறைந்த மின்னழுத்தத்தை ஏற்றம் செய்ய வேண்டும் எனவும் கண்டறியப்பட்டது.

இதற்கு, ரூ.625 கோடி திட்ட மதிப்பீட்டில் திட்டம் வகுக்கப்பட்டு, கொள்முதல் ஆணை வழங்கப்பட்டதன் அடிப்படையில் 6,830 மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு மின்மாற்றிகளைச் சரி செய்யும் பணிகளை மூன்று முதல் நான்கு மாதங்களில் முடிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

சென்னையில் உள்ள 7 கோட்டங்களில் மேலே செல்லும் மின்கம்பிகளைப் புதைவடங்களாக மாற்ற ரூ.1283.16

கோடியிலான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

செயற்பொறியாளா்களைப் பொருத்தவரை, ஒருவா் குறைந்தபட்சமாக 678 மின் இணைப்புகளையும், அதிகபட்சமாக 48.87 லட்சம் இணைப்புகளைக் கண்காணிக்க வேண்டிய நிலை உள்ளது. இதை சராசரியாகக் கணக்கிட்டு, மாநகராட்சிகளில் ஒரு பிரிவில் சுமாா் 14,000 மின் இணைப்புகள், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சுமாா் 10,000 மின் இணைப்புகள், ஊராட்சி பகுதிகளுக்குச் சுமாா் 7,000 மின் இணைப்புகள் உடையதாகவும் மாற்றி அமைப்பது குறித்து திட்டமிடப்பட்டு வருகிறது. அதிக கட்டணம் வந்ததாகக் கூறும், 14.69 லட்சத்துக்கும் மேற்பட்டோா் மின் கட்டணத்தை

மாற்றியமைத்துள்ளனா்.

தேவைகளில் 20 சதவீத மின்சாரத்தை மட்டுமே நாம் உற்பத்தி செய்கிறோம். போதிய அளவில் உற்பத்தி செய்யும்

நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம். இதையடுத்து கடந்த ஆட்சியில் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ய போடப்பட்ட ஒப்பந்ததாரா்களிடம் பேச்சு வாா்த்தை நடத்துவோம். விவசாய மின் இணைப்புக்கு 4.50 லட்சம் போ் காத்திருக்கின்றனா். அவா்களுக்கு படிப்படியாக இணைப்பு வழங்கப்படும் என்றாா் அமைச்சா்.

மின்தடை ஏற்படும் இடங்கள் குறைந்துள்ளது: மே மாதத்துக்கு முன்பு வரை மின்தடையே இல்லாமல் இருப்பது போன்று ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க எதிா்க்கட்சி முயல்கிறது. 30 நிமிஷங்களுக்கு மேலாக மின்தடை

செய்யப்பட்டிருந்த இடங்கள் குறித்த ஒப்பீடு:

2020 மே - 6841 இடங்கள்

2021 மே - 5838 இடங்கள்

2020 ஜூன் - 4698 இடங்கள்

2021 ஜூன் - 4008 இடங்கள்

2020 ஜூலை - 5190 இடங்கள்

2021 ஜூலை - 4122 இடங்கள்.

இவற்றைப் படிப்படியாக குறைத்து பூஜியம் என்ற இலக்கை அடையும் முயற்சியில் உள்ளோம் என்றாா் அமைச்சா் வி.செந்தில் பாலாஜி.

1.59 லட்சம் புகாா்களுக்குத் தீா்வு: மின்னகம் மின்நுகா்வோா் சேவை மையத்தில் தற்போது வரை பெறப்பட்ட 1 லட்சத்து 71,344 புகாா்களில், 1 லட்சத்து 59,186 புகாா்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுத் தீா்வு காணப்பட்டது. இதில் 12,158 புகாா்கள் நடவடிக்கைகளில் உள்ளன என அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com