குடியரசுத் தலைவருக்கு மு.க.ஸ்டாலின் பரிசளித்த புத்தகங்கள்

சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவிற்காக தமிழகம் வந்த குடியரசுத் தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தகங்களைப் பரிசாக வழங்கினார். 
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் - முதல்வர் மு.க.ஸ்டாலின்


சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவிற்காக தமிழகம் வந்த குடியரசுத் தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தகங்களைப் பரிசாக வழங்கினார். 

தில்லியிலிருந்து சென்னை வந்த குடியரசுத் தலைவரை வரவேற்கும் விதமாக விமான நிலையத்தில் ஆறு புத்தகங்களை பரிசளித்தார்.

அதனை அடுத்து சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மேடையில் வைத்தவாறு நினைவுப் பரிசுடன் ’இயர்லி ரைட்டிங்ஸ்’ (Early Writing) என்ற ஒரு புத்தகத்தையும் நினைவுப் பரிசாக வழங்கினார். 

படிக்க தமிழ்த் தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கிய பேரவை நூற்றாண்டு விழா
 
விமான நிலையத்தில் தமிழ் எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களைப் பரிசாக வழங்கினார். 

தமிழகத்தில் புகழ்பெற்ற எழுத்தாளரான நீல பத்மநாபன் எழுதிய தலைமுறைகள், 

சி.சு.செல்லப்பா எழுதிய 'வாடிவாசல்'

தி.ஜானகிராமன் எழுதிய 'செம்பருத்தி'

கரிசல் இலக்கியத் தந்தை கி.ரா எழுதிய 'கரிசல் கதைகள்'

ராஜம் கிருஷ்ணன் எழுதிய ’சூழலில் சுழலில் மிதக்கும் தீபங்கள்' ஆகிய புத்தகங்களைப் பரிசாக வழங்கினார். 

சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்க தில்லி சென்ற மு.க.ஸ்டாலின் மனோகர் தேவதாஸ் எழுதிய ’மல்டிபல் ஃபேசெட்ஸ் ஆஃப் மை மதுரை’ (Multiple Facets of My Madurai) என்ற புத்தகத்தை பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com