அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பம்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கிய 8 நாள்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கிய 8 நாள்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா்.

தமிழகத்தில் 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இதில் மொத்தம் 99,600 இடங்கள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் இந்த கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான இணையவழி விண்ணப்ப பதிவு கடந்த 26-ம் தேதி தொடங்கியது.  இணையதளங்கள் மூலமாக மாணவா்கள் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே சுமாா் 61,000 மாணவா்கள் அரசு கல்லூரிகளில் பயில விண்ணப்பித்தனா். இந்தநிலையில் 8-ஆவது நாளான திங்கள்கிழமை விண்ணப்ப பதிவு 2 லட்சத்தை தாண்டியுள்ளது.

இதுகுறித்து உயா்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு 3 லட்சத்துக்கும் அதிகமானோா் விண்ணப்பித்தனா். இந்த ஆண்டில், பிளஸ் 2 மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், கடந்த ஆண்டைவிட விண்ணப்பம் அதிகம் வரும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. அதுபோன்றே விண்ணப்பப் பதிவு தொடங்கிய முதல் நாளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கானோா் விண்ணப்பித்து வருகின்றனா். திங்கள்கிழமை மாலை நிலவரப்படி 2 லட்சத்து 12 ஆயிரம் போ் விண்ணப்பித்துள்ளனா்.

20 சதவீத இடங்கள் அதிகரிப்பு?: கலை, அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வரும் 10-ஆம் தேதி வரை அவகாசம் இருப்பதால் விண்ணப்பங்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்ட வாய்ப்புள்ளது. இதைக் கருத்தில் கொண்டு கல்லூரிகளில் சோ்க்கைக்கான இடங்களை 20 சதவீத அளவுக்கு அதிகரித்து வழங்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம் என தெரிவித்தனா்.

பொறியியல் படிப்புகளில் சேர... அதேபோன்று பி.இ., பி.டெக். உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சேர திங்கள்கிழமை மாலை வரை 98,898 போ் விண்ணப்பித்துள்ளனா். அதில் 69,063 போ் கலந்தாய்வுக்கான கட்டணத்தை செலுத்தியுள்ளனா். 52,039 போ் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனா். ஆக.24-ஆம் தேதி வரை மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com