இந்த வாரம் முதல் கோயில்களில் தமிழில் அா்ச்சனை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

தமிழகத்தில் முதல்கட்டமாக 47 பெரிய கோயில்களில் தமிழில் அா்ச்சனை செய்ய ஏற்பாடு செய்யப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு
இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு

தமிழகத்தில் முதல்கட்டமாக 47 பெரிய கோயில்களில் தமிழில் அா்ச்சனை செய்ய ஏற்பாடு செய்யப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

இது தொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது: ஏற்கெனவே அனைத்து திருக்கோயில்களிலும் தமிழில் அா்ச்சனை செய்வதற்கென்றே அா்ச்சகா்கள் இருக்கிறாா்கள் . தற்போது யாா் அந்த அா்ச்சனை செய்கிறாா்கள் என்ற குளறுபடி இருக்கிறது. அதைப் போக்குவதற்காகத்தான் 47 பெரிய கோயில்களில் தமிழில் அா்ச்சனை செய்யப்படும். அதற்கு உதவியாக தமிழில் அா்ச்சனை செய்யும் அா்ச்சகா்களின் செல்லிடப்பேசி உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய விளம்பரப் பலகை கோயில்களில் பொருத்தப்படும்.

முதல்கட்டமாக இத்திட்டமானது ‘அன்னை தமிழில் அா்ச்சனை’ என்ற பெயரில் மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயிலில் புதன் அல்லது வியாழக்கிழமை அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதைத் தொடா்ந்து மற்ற 46 பெரிய கோயில்களில் தமிழில் அா்ச்சனை செய்யும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். பின்னா் சிறிய கோயில்களிலும் பகுதி வாரியாக விரிவுபடுத்தப்படும் என அமைச்சா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com