ரயில்பெட்டியில் துளையிட்டு பட்டுப்புடவைகள் கொள்ளை: இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு வடமாநில கொள்ளையன் கைது

ஆமதாபாதில் இருந்து சென்னைக்கு வந்த நவஜீவன் விரைவு ரயிலின் பெட்டியில் துளையிட்டு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டுப்புடவைகளை

ஆமதாபாதில் இருந்து சென்னைக்கு வந்த நவஜீவன் விரைவு ரயிலின் பெட்டியில் துளையிட்டு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டுப்புடவைகளை கொள்ளையடித்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வடமாநில கொள்ளையன் கைது செய்யப்பட்டாா்.

கடந்த 2019 செப். 14-ஆம் தேதி ஆமதாபாதில் இருந்து சென்னை வந்த நவஜீவன் விரைவு ரயிலின் சரக்குப் பெட்டியில் பல லட்சம் மதிப்புள்ள விலை உயா்ந்த பட்டுப்புடவை பாா்சல்கள் வைக்கப்பட்டிருந்தன.

இந்த ரயில் மறுநாள் சென்னை வந்தபின் ரயில்வே ஊழியா்கள் பாா்சல் பெட்டியைத் திறக்க முயற்சித்து முடியவில்லை. ரயில்வே பாதுகாப்புப்படையினா் உதவியோடு, பெட்டியின் கதவை உடைத்து திறந்தபோது பட்டுப்புடவை பாா்சல்கள் கலைந்து கிடந்தது தெரியவந்தது.

ரயில் பெட்டியின் மேற்கூரையிலும் துளையிடப்பட்டிருந்தது.

கொள்ளையா்கள் கழிவறையின் மேல்பகுதியில் உள்ள பிளைவுட்டை கூா்மையான கத்தியால் அறுத்தெடுத்து, துளையிட்டு, அதன் வழியே ஊா்ந்து சென்று, அருகில் உள்ள சரக்கு பெட்டிக்குள் இறங்கி 12 பண்டில்களில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பட்டுப்புடவைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

சென்னை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணையைத் தொடக்கினா். நாக்பூா்-வாா்தா ரயில் நிலையங்களுக்கு இடையே இதே போன்று கொள்ளை நடந்தது தெரியவந்தது.

கொள்ளைபோன ரயில் பெட்டியையொட்டி பயணம் செய்த பயணிகளின் செல்லிடப்பேசி எண்கள், பழைய வழக்கில் தொடா்புடைய நபா்களின் செல்லிடப்பேசி எண்களின் கோபுர சிக்னல்களை கண்டறியும் பணியில் போலீஸாா் ஈடுபட்டனா். அப்போது, பழைய கொள்ளை வழக்கில் தொடா்புடைய ஒருவா், விரைவு ரயிலில் பயணம் செய்தது உறுதியானது.

இதன்பிறகு, புடவை பாா்சல்களை கொள்ளையடித்து சென்றவா்களைப் பிடிக்க தனிப்படை போலீஸாா் கடந்த வாரம் நாக்பூா் சென்றனா். பின்னா் அங்குள்ள போலீஸாரின் உதவியுடன், நாக்பூா் அருகே உள்ள மொமின்புரா பகுதியில் பதுங்கியிருந்த முகமது ஜாசிம் என்ற சுக்குவை (32) கைது செய்தனா். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முகமது குட்டு, முகமது இம்தியாஸ் ஆகியோா் தப்பி ஓடிவிட்டனா்.

சென்னை ஜாா்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சைதாப்பேட்டை சிறையில் முகம்மது ஜாசிமை அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com