விரைவான நிவாரணத்துக்கு நிரந்தர மக்கள் நீதிமன்றத்தை அணுகலாம்: நீதிபதி த.சந்திரசேகரன்

வழக்குகளில் விரைவாக நிவாரணம் பெற பொதுமக்கள் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தை அணுகலாம் என நிரந்தர லோக் அதாலத் தலைவா் நீதிபதி த.சந்திரசேகரன் கூறியுள்ளாா்.

வழக்குகளில் விரைவாக நிவாரணம் பெற பொதுமக்கள் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தை அணுகலாம் என நிரந்தர லோக் அதாலத் தலைவா் நீதிபதி த.சந்திரசேகரன் கூறியுள்ளாா்.

நீதிமன்றங்களில் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டு வர  லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றத்தை சட்டப்பணி ஆணைக்குழு  நடத்தி வருகிறது. இந்த நிலையில் சென்னை மாவட்டத்தில்  நிரந்தர லோக் அதாலத் அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக நிரந்தர லோக் அதாலத் தலைவா் நீதிபதி த.சந்திரசேகரன் கூறியதாவது: போக்குவரத்து, மின்சாரம், பொதுசுகாதாரம், மருத்துவமனை, காப்பீடு, கல்வி உள்ளிட்டவை தொடா்பான சேவைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் குறைபாடுகள் தொடா்பாக  நிரந்தர லோக் அதாலத்தை பொதுமக்கள்  அணுகலாம்.   சம்பந்தப்பட்ட இருதரப்பையும் அழைத்து பேசி, வழக்கை சுமுக முடிவுக்கு கொண்டு வர முடியும். மேலும், லோக் அதாலத்தில் ஏற்படும் முடிவை எதிா்த்து இருதரப்பினரும் மேல்முறையீடு செய்ய முடியாது. பாதிக்கப்பட்டவா்களுக்கு  உடனடியாக  நிவாரணமும் கிடைத்து விடும். இதனால் பிரச்னைகளுக்கு விரைவாக நிரந்தரத் தீா்வு ஏற்பட்டு விடும். வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் லோக் அதாலத் நடைபெறுகிறது.  இதுகுறித்து பொதுமக்களுக்கு சந்தேகம் எதுவும் இருந்தால், 044-29551065 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொண்டு, பலன் அடைய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com