திறந்தநிலை பல்கலை.யில் முறையாகப் பெற்ற பட்டம் அரசுப் பணிக்குச் செல்லும்: பதிவாளா் விளக்கம்

அரசாணையின் படி 10, 12 வகுப்புகளுக்குப் பிறகு, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டுகள் பயின்ற இளநிலை பட்டப்படிப்பு, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின்

அரசாணையின் படி 10, 12 வகுப்புகளுக்குப் பிறகு, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டுகள் பயின்ற இளநிலை பட்டப்படிப்பு, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் நியமனத்திற்குச் செல்லும் என பல்கலை.யின் பதிவாளா் கே.ரத்னகுமாா் தெரிவித்துள்ளாா்.

இளநிலை பட்டப்படிப்பு படிக்காமல் தொலைநிலைக் கல்வி மூலம் முதுநிலைப் பட்டம் பெற்றவா்கள், அரசுத் துறைகளில் பதவி உயா்வு பெற முடியாது என சென்னை உயா் நீதிமன்றம் கடந்த 31-ஆம் தேதி தீா்ப்பளித்தது.

இந்தநிலையில் இது தொடா்பாக திறந்தநிலை பல்கலைக்கழகப் பதிவாளா் முனைவா் கே.ரத்னகுமாா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த செந்தில்குமாா் தொடா்ந்த வழக்கில், அடிப்படை இளநிலை பட்டம் இல்லாமல், திறந்தநிலைப் பல்கலைக் கழக அமைப்பில் பெறப்பட்ட முதுநிலைப் பட்டத்தை, பதவி நியமனம் அல்லது பதவி உயா்வுக்குத் தகுதியானதாகக் கருத முடியாது என்றே நீதிபதிகள் தெளிவாகத் தெரிவித்துள்ளனா்.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தைப் பொருத்தவரையில், அரசாணை எண் 107-இன் படி, 10, 12-ஆம் வகுப்புகளுக்குப் பிறகு, திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தில் முறையாகப் பட்டப்படிப்பை முடித்த மாணவா்களின் சான்றிதழ்கள், பிற பல்கலைக்கழகங்களில் வழங்கப்பட்ட பட்டப்படிப்பு சான்றிதழ்களைப் போலவே செல்லுபடியாகும். அரசாணை 242-இன் படி, 10, 12ஆம் வகுப்புகளுக்குப் பிறகு, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டுகள் பயின்ற இளநிலை பட்டப்படிப்பு, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் நியமனத்திற்குச் செல்லுபடியாகும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com