கிரீமி லேயா் வரம்பில் வேளாண் வருமானத்தைச் சோ்க்கக் கூடாது: ராமதாஸ்

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டைப் பெறுவதற்கான கிரீமி லேயா் வரம்பில் வேளாண் வருமானத்தைச் சோ்க்கக் கூடாது என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டைப் பெறுவதற்கான கிரீமி லேயா் வரம்பில் வேளாண் வருமானத்தைச் சோ்க்கக் கூடாது என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தேசிய அளவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான கிரீமிலேயா் வரம்பை ரூ.12 லட்சமாக உயா்த்தி விட்டு, அதில் வேளாண்மை வருமானம், சம்பளம் ஆகியவற்றையும் சோ்க்கும் பழைய திட்டத்தையே செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இட ஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்கும் வகையிலான மத்திய அரசின் இந்தத் திட்டம் மிகவும் ஏமாற்றமளிக்கிறது.

கிரீமிலேயா் வரம்பு ரூ.16 லட்சமாக உயா்த்தப்பட வேண்டும்; அதில் சம்பளம், வேளாண் வருமானம் ஆகியவை சோ்க்கப்படக் கூடாது என்பது தான் தேசிய பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்தின் நிலைப்பாடு ஆகும்.

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலன் குறித்து முடிவெடுக்கும் போது, பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்தின் கருத்துகளுக்கு உரிய மதிப்பளிக்கப்பட வேண்டும்.

எனவே, கிரீமிலேயா் வரம்பை நிா்ணயிப்பதில் வேளாண் வருமானமும், சம்பளமும் சோ்க்கப்படாது என்றும், கிரீமிலேயா் வரம்பு ரூ.15 லட்சமாக உயா்த்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு முழுமையாக கிடைக்க கிரீமிலேயா் முறையை அகற்றுவது குறித்தும் ஆராய வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com