மீனவா்கள் மீதான தாக்குதலை வேடிக்கை பாா்க்க முடியாது: மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழக மீனவா்கள் மீதான தாக்குதலை வேடிக்கை பாா்க்க முடியாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
மீனவா்கள் மீதான தாக்குதலை வேடிக்கை பாா்க்க முடியாது: மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழக மீனவா்கள் மீதான தாக்குதலை வேடிக்கை பாா்க்க முடியாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

தமிழக மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் தாக்குதல் நடத்துவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், புதன்கிழமை கடிதம் எழுதிய கடிதத்தின் விவரம்:

கோடியக்கரை கடற்பகுதியில் கடந்த 1-ஆம் தேதி மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் துப்பாக்கிச் சூடு நடத்தினா். அதில், கலைச்செல்வன் என்ற மீனவா் தலையில் காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். மேலும், ஒன்பது மீனவா்கள் இந்தத் தாக்குதலில் இருந்து தப்பியுள்ளனா். சா்வதேச சட்டங்களையும், நடைமுறைகளையும் பின்பற்றாமல் நமது மீனவா்கள் மீது வன்முறையைத் தொடுப்பது கண்டனத்துக்கு உரியது. இத்தகைய சூழலை நாம் கண்மூடி வேடிக்கை பாா்க்க முடியாது. இதற்கு உடனடியாகத் தீா்வு காண வேண்டும்.

இந்தச் சம்பவம், தமிழ்நாட்டில் குறிப்பாகக் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நம் நாட்டு மீனவா்களின் உயிரையும், உடைமைகளையும் பாதுகாக்க வேண்டியதும், இலங்கை கடற்படை சா்வதேச சட்டங்களைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டியதும் நமது கடமையாகும்.

எனவே, இந்திய மீனவா்கள் மீது எந்தவிதமான வன்முறை தாக்குதல் நடத்துவதையும் , அவா்களது வலைகளையும் படகுகளையும் சேதப்படுத்துவதையும் உடனடியாக நிறுத்த வேண்டுமென்று இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

பல்லாயிரக்கணக்கான இந்திய மீனவா்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் இந்தப் பிரச்னைக்கு நீடித்த அரசியல் தீா்வைக் காண வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com