மோசமான வானிலை: சாலைவழி கோவை வந்து தில்லி புறப்பட்டுச் சென்றார் குடியரசுத் தலைவர்

வானிலை மோசமான காரணத்தால் சாலை மார்க்கமாக கோவை வந்த குடியரசுத் தலைவர் தில்லி புறப்பட்டுச் சென்றார்.
மோசமான வானிலை: சாலைவழி கோவை வந்து தில்லி புறப்பட்டுச் சென்றார் குடியரசுத் தலைவர்

வானிலை மோசமான காரணத்தால் சாலை மார்க்கமாக கோவை வந்த குடியரசுத் தலைவர் தில்லி புறப்பட்டுச் சென்றார்.

ஒரு வாரம் தமிழக சுற்றுப் பயணம் மேற்கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெள்ளிக்கிழமை காலை உதகையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக சூலூர் வந்து விமானப்படை தளத்தில் இருந்து தனி விமானம் மூலமாக தில்லி செல்வதாக இருந்தது. 

உதகையில் வானிலை மோசமாக இருந்ததால் சாலை மார்க்கமாக கார் மூலமாக கோவை நோக்கி குடியரசுத் தலைவர் வந்தார். 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 5 நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் பல்வேறு  நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கடந்த 2-ஆம் தேதி சென்னை வந்தார். அன்று மாலை தமிழக சட்டப் பேரவையின் நூற்றாண்டு விழாவையொட்டி முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியின் உருவப்படத்தை சட்டப் பேரவையில் திறந்து வைத்து உரையாற்றினார். 

அதனைத் தொடர்ந்து அவர் சூலூர் விமானப்படைத் தளத்துக்கு வந்து அங்கு நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு சென்று தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று. வெள்ளிக்கிழமை காலை தில்லி திரும்புவதாக இருந்தது.

இந்த நிலையில் உதகை ராணுவ பயிற்சி மையமான வெலிங்டன் மைதானத்தில் ஹெலிகாப்டர் தயார் நிலையில் இருந்தது. வானிலை மோசமாக இருந்ததால் சாலை மார்க்கமாக அவர் கோவையை நோக்கி வந்தார். 

திடீரென அவர் சாலை மார்க்கமாக வருவதால் உதகையில் இருந்து சூலூர் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

சூலூர் விமானப் படைத்தளத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தில்லிக்கு புறப்பட்டுச் சென்றார். வழியனுப்பு நிகழ்வில் ஆளுநர், அமைச்சர்கள், ஆட்சியர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com