செங்கல்பட்டில் கரோனா விழிப்புணர்வு பேரணி

செங்கல்பட்டு நகராட்சி சார்பில் கரோனா தொற்று 3வது அலை வருவதத்  தடுக்கும் விதமாகவும், பாதுகாப்பு முறைகள் குறித்தும் வெள்ளிக்கிழமை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
செங்கல்பட்டில் கரோனா விழிப்புணர்வு பேரணி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சி சார்பில் கரோனா தொற்று 3வது அலை வருவதத்  தடுக்கும் விதமாகவும், பாதுகாப்பு முறைகள் குறித்தும் வெள்ளிக்கிழமை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

நாடு முழுவதும் கரோனா தொற்று மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. முதல் அலை மற்றும் இரண்டாம் அலையைத் தொடர்ந்து மூன்றாம் அலையும் வருவதற்க்குண்டான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்களும் வெளியாகியுள்ளது .

இந்த நிலையில் செங்கல்பட்டு நகராட்சி சார்பில் கரோனா ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நகராட்சி ஆணையர் ராஜலக்ஷ்மி தலைமையில் கரோனா ஒழிப்பு உறுதிமொழி ஏற்று, பேரணியானது துவங்கப்பட்டது.

இந்த பேரணி செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் துவங்கி மணிக்கூண்டு, ராஜாஜி சாலை வழியாக சென்று புதிய பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது 

இந்த கரோனா ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் கரோனா தொற்றுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாதைகள் ஏந்தியபடி 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். செங்கல்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பவானி உள்ளிட்ட சுகாதார நிலைய பணியாளர்கள், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றனர். பொதுமக்களுக்கு கரோனா விழிப்புணர்வு  துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com