சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 1,910 ஆக உயர்வு

சென்னையில் கடந்த ஜூலை 30ஆம் தேதி கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களின் எண்ணிக்கை 1,508 ஆக இருந்த நிலையில், இன்று அது 1,910 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 1,910 ஆக உயர்வு
சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 1,910 ஆக உயர்வு

சென்னையில் கடந்த ஜூலை 30ஆம் தேதி கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களின் எண்ணிக்கை 1,508 ஆக இருந்த நிலையில், இன்று அது 1,910 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா நோயாளிகள் எண்ணிக்கை ஜூலை 31ஆம் தேதி 1,569 ஆகவும், ஆகஸ்ட் 1ஆம் தேதி 1,627 ஆகவும் இருந்தது. ஆகஸ்ட் 4ஆம் தேதியன்று இது 1,802 ஆக உயர்ந்த நிலையில், ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று 1,910 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த மாதத்தில் சென்னையில் கரோனா பரவல் குறைந்து வந்த நிலை மாறி, ஜூலை இறுதியில் குறையும் வேகம் குறைந்தது. 

தற்போது, கரோனா நோயாளிகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.  இன்று காலை நிலவரப்படி, சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5.39 லட்சமாக உள்ளது. இவர்களில் 5.29 லட்சம் பேர் குணமடைந்துவிட்டனர். 1,910 பேர் சிகிச்சையில் உள்ளனர். 8,335 பேர் கரோனாவுக்கு பலியாகிவிட்டனர்.

சென்னையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து கடந்த ஆண்டு மே மாதத்தில் 10 ஆயிரத்தை எட்டியது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு ஜூன் மாதம் பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரமாகவும், அதைத் தொடா்ந்த 3 மாதங்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், வீடுவீடாக காய்ச்சல் பாதித்தவா்களைக் கண்டறிதல், மருத்துவப் பரிசோதனை முகாம்கள் மற்றும் தொற்று உறுதியானவா்களை தனிமைப்படுத்துதல், அவா்களை மருத்துவமனையில் அனுமதித்தல் ஆகிய நடவடிக்கை காரணமாக சென்னையில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் கரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது. கடந்த பிப்ரவரி மாதத்தில் நாளொன்றுக்கு சுமாா் 200-க்கும் குறைவானவா்களே பாதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், இரண்டாம் அலை காரணமாக மீண்டும் சென்னையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை உயரத் தொடங்கியது. கடந்த மே மாதத்தில் நாளொன்றுக்கு சுமாா் 5,000 போ் வரை தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் அதன் பிறகு தொற்று எண்ணிக்கை ஜூன் மாதத்தில் நாளொன்றுக்கு 500-க்குகீழும், ஜூலை மாத மத்தியில் 200-க்கு கீழும் குறையத் தொடங்கியது.

மீண்டும் அதிகரிப்பு: இந்நிலையில், சென்னையில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது. இதன்படி, கடந்த ஆகஸ்ட் 1-இல் 175 பேருக்கும், 2-இல் 189 பேருக்கும், 3-இல் 203 பேருக்கும், 4-இல் 189 பேருக்கும், 5-இல் 196 பேருக்கும், 6-இல் 189 பேருக்கும் என கூடி, குறைந்து வந்த நிலையில் தற்போது அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.

எனவே, சென்னையில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதை மக்கள் கவனத்தில் கொண்டு, எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இல்லையென்றால், மூன்றாவது அலை உறுதியாகிவிடும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com